
மின்சாரம் தாக்கி மாண்டு விட்டாய்
எங்களை விட்டுப் பிரிந்து விட்டாய்
என்ன நடந்தது தெரியவில்லை
எதனாலே, இன்னும் அது புரியவில்லை
எல்லாம் அன்று நொடிப் பொழுதில் நடந்திடவே
இன்னும் நாங்கள் விடைதேடி நிற்கின்றோம்
வகுத்த செயல் முறைகளைப்
பின்பற்றியிருந்தால்
இன்று இன்னும் எங்களுடன் இருந்திருப்பாய்
மறைந்திருந்த ஆபத்தைப் பார்க்காததால்
பெரும் விபத்தில் அது முடிந்த தப்பா
பாதுகாப்பு உபகரணங்கள் நீ அணிந்திருந்தால்
எமனை வென்று இன்று நின்று இருப்பாய்
உன்னை திரும்பக் கூப்பிட எங்களுக்கு
சக்தி இல்லை
ஒருவேளை எங்கள் மனக்குமுறல்
கேட்டு நீ வந்தால்
இதைதான் எங்களுக்கு சொல்லிடுவாய்
பலமுறை எங்களை எச்சரிப்பாய்
இனி வேலையைத் துவங்கும் முன்
சிறு இடைவேளை விட்டு
நம் பாதுகாப்பு, நம்முடன் இருப்போரின் பாதுகாப்பு
அதைப் பற்றி முதலில் சிந்திப்போம்
பிறகு வேலைகளின் சவால்களைச் சந்திப்போம்
நமக்காகப் பலருண்டு வீட்டினிலே
அந்தக் கவனம் எப்போதும் இருக்கட்டும் நமக்குள்ளே
என் ஆயுள் அது முடிந்தது
விண்ணுலகம் செல்கின்றேன்
என் விதி
அதுபோல
ஆக வேண்டாம்
உங்கள் கதி
பின்பற்றுங்கள்
மறக்காமல் எல்லா பாதுகாப்பு விதி
அதுவே சிறந்த மதி
தருமே அனைவருக்கும் நிம்மதி