உணர்ந்தது இதுதான்

இருளில் இருளே
தெரியாத இரவு

என்னுடன் தனியே
நான் அமர்ந்தபோது

பல எண்ணங்கள் எழுந்து ஓய்ந்து
இரவின் அமைதி என்னைத் தழுவியபோது

உணர்ந்தது இதுதான் கேளு

நானே என் விதியின் தலைவன்
இருந்தால்,எனக்குள் தான் இருக்கிறான் இறைவன்.
எண்ணம் போல் வாழ்க்கை
தினம் தினம் வேண்டும் நிறைய தன்னம்பிக்கை!

அன்றே சொன்னான் தமிழன்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்
யுத்தம்
சிந்துகிறார்கள் ரத்தம்
உலகெங்கும் பாதிப்பு நித்தம்

கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம்
அத்தியாவசிய பொருட்களின் விலையில் தடுமாற்றம்
சராசரி மக்கள் திண்டாட்டம்
உலக பொருளாதார நிலை நடுக்கம்

யாருக்கோ இதில் கொண்டாட்டம்
தெளிவுறவேண்டும்  அவர்களின் கலங்கிய சித்தம்
தர வேண்டும் அவர்கள் அமைதிக்கு முத்தம்
உடனே நிற்கவேண்டும் போர் சத்தம்
உலகெங்கும் பரவ வேண்டும் சகோதரத்துவம்

அன்றே சொன்னான் தமிழன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்போதாவது கேட்பீர்

மரம் தருமா வரம் ?

கிளியும் வரும்
குயிலும் வரும்
காகமும் வரும்
வேறு சில பறவைகளும் வரும்

எல்லாம் வந்து இம்மரத்தில் அமரும்
வேறுபாடு பார்ப்பதில்லை மரம்
அனைத்துக்கும் பொதுவாய் நிற்கிறது
தென்றல் பட மெதுவாய் அசைகிறது

அதன் அருகே நிற்கின்றேன்              அதன் பண்பை நேசிக்கிறேன்              அதன் காற்றைச் சுவாசிக்கிறேன்

நான் ஏன் அதுபோல் இல்லை ?  ‘      என்று யோசிக்கிறேன்    அந்நற்பண்பைப் பெற யாசிக்கிறேன்

மரம் தருமா வரம் ?

தமிழ் புத்தாண்டு

சித்திரை பிறக்க
புது முத்திரை பதிக்க
நம் வாழ்வு செழிக்க

புது முயற்சிகள் எடுப்போம்
மனச் சோர்வினை கலைப்போம்
புது நம்பிக்கை விதைப்போம்
புது சரித்திரம் படைப்போம்

இந்த ஆண்டும் கடந்து போகும்
ஆனால்

மிகச் சிறந்த ஆண்டாக
நம் கனவுகள் மலர்ந்த ஆண்டாக
நம்மால் பிறர் உயர்ந்த ஆண்டாக
எல்லா நலமும் வளமும் ஒன்று சேர்ந்த ஆண்டாக

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அதனால் என்ன ?

மனச்சோர்வு இருக்கட்டுமே
வெற்றிக்கான வழிகள் மறையட்டுமே
தோல்விகள் அணைக்கட்டுமே
புது புதுத் தடைகள் முளைக்கட்டுமே
இருள் தான் சூழட்டுமே

அதனால் என்ன ?

தன்நம்பிக்கை மட்டும் இருக்கட்டுமே
அதுவே நம்மை நிச்சயம்  உயர்வாக்குமே !

வேண்டும்

உலகளவு அறிவு வேண்டும்
இமயமலை அளவுக்கு
அனுபவங்கள் வேண்டும்

கடல் ஆழம் அளவுக்கு என்னுள்
நான் செல்ல வேண்டும்
என்னை நான் அறிய வேண்டும்

கடவுள் இருந்தால் அவரைக் கண்டு
கைகுலுக்க வேண்டும்
அவர் அளவுக்கு ஆயுள் வேண்டும்

மின்சாரத்தின் சக்தி வேண்டும்
பிறருக்கு உதவப் பெருஞ்செல்வம் வேண்டும்
கடையேழு வள்ளல்களுக்கு நான் கொடுக்க வேண்டும்

இப்போது இக்கனவு கலைய
நான் எழ வேண்டும்.
எப்போதும் இக்கனவு நினைவாக
நான் உழைக்கவேண்டும்.