பெரியார்

எங்கோ நாம் வைத்த  நம்பிக்கைகளை
அதனால் ஓங்கிய சில கைகளை
ஆழ்ந்து சிந்தித்துப் பல வகைகளில்
உடைத்தெறிந்தார் மூடநம்பிக்கைகளை

நம்மேல் நாம் என்ற தன்னம்பிக்கையை
வளர்க்க கை கொடுத்தவர்
அவர் யார் ?

களைப்பறியா உழைப்பு
எவரையும் எதிர்க்கும் துணிவு
பெரும் சமுதாய மாற்றத்திற்கான முனைப்பு
இறுதிவரை தன் கொள்கைகளில் உறுதியான பிடிப்பு
இதையெல்லாம் கொண்டிருந்தவர்
அவர் யார் ?

பின்தங்கியவர்களை
முன் படுத்தியவர்
மிகப்பெரியவர்
அவர்தான் பெரியார்

எப்படி எழும் வந்த வினா ?

உன் கண்கள் என்ன மீனா ?

என் மனதுக்குள் நீந்துகிறதே தானா

நீ தித்திக்கும் தேனா ?

உன்னைப் பற்றி எழுதும் போது மகிழ்கிறதே என்பேனா?

நான் பிறந்தது என்ன வீணா ?

இல்லை உன்னைப் பார்த்த பின்

எப்படி எழும் வந்த வினா ?