மழை
இவர்களை மகிழ்விக்கப் பொழிந்த மழை
அடைமழை இல்லையேல் இவ்வுலகிற்கு பரிதாபநிலை
மலையடி கிராமம்
நாம் இருக்க மறுக்கும்
மலையடி கிராமம்
இங்கு கூழ் உண்டு
கூகுள் இல்லை
மழை
இவர்களை மகிழ்விக்கப் பொழிந்த மழை
அடைமழை இல்லையேல் இவ்வுலகிற்கு பரிதாபநிலை
மலையடி கிராமம்
நாம் இருக்க மறுக்கும்
மலையடி கிராமம்
இங்கு கூழ் உண்டு
கூகுள் இல்லை
கடற்கரையில் ஒரு இளம்பெண்
அது உப்பு நீர் ரோசம் அதிகம்
உன் கால் தொடாது
சுனாமி தான் வந்திடுமா ?
உன்னைத் தாண்டி பொங்கிடுமா ?
நீ அங்கிருந்தால் சுனாமி தான் வந்திடுமா ?
ஒரு நூறு வருடம்
உன் கால் பட்ட மண் கர்வம் கொள்ளுமடி
பொறாமை கொண்டு கடலலை அதை அழித்திடுமடி
எனக்கு பேராசை கிடையாது
என்னுடன் ஒரு நூறு வருடம் மட்டும் இருந்துவிடடி
சமீபத்தில் அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் மகாணத்தில் உள்ள ப்ரொவிஷன் லிவிங் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின் படி அமெரிக்க வாழ் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5.4 மணி நேரம் தங்கள் கைப்பேசி பயன்படுத்துதலில் செலவிடுகிறார்கள் எனக்கூறியுள்ளது.
இந்தத் தகவலைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. நான் என் கைப்பேசியுடன் செலவழிக்கும் நேரத்தைக் கணக்கிட ஆரம்பித்தேன். அது சராசரியாக ஒரு நாளைக்கு 2.4 மணி நேரத்தைத் தொட்டது.
நீங்களும் கொஞ்சம் செய்து பாருங்களேன் அது உங்களுக்கும் ஆச்சரியத்தையும் அதேசமயம் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.
நாம் ஏன் கைப்பேசியால் மிகவும் கவரப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பார்த்தேன். சில விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
கைப்பேசி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் இது எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட ஒரு மாய வலை. இதில் நாம் சிக்கிக் கொண்டால் மிழ்வது கடினம்.
இந்த மாயவலை நமக்கு மூன்று விஷயங்களைத் தருகிறது
1. நிறையத் தகவல்கள். நாம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய தகவல்களை யாருடைய தயவுமின்றி இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. நாம் சொல்வதை, எழுதுவதை, நம் படங்களை, சமூக ஊடகங்களில் நாம் செய்யும் போஸ்ட்களை, பார்க்கக் கேட்க யாரோ ஒருவர் எங்கோ இருக்கிறார் என்ற ஒரு ஆறுதலைத் தருகிறது.
3. ஒரு கைப்பேசியும் இணைய இணைப்பும் இருந்துவிட்டால் போதும் நாம் இவ்வுலகில் எப்போதுமே தனிமையாக இல்லை என்ற ஒரு உணர்வையும் தருகிறது.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்கள் நமக்குப் பல நன்மைகளைத் தருகின்ற போதிலும் அதனால் சில பாதிப்புகளும் உண்டாகின்றன.
சற்று உளவியல் ரீதியாக அலசிப் பார்த்தால்
நமக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் கிடைக்கும்போது நாம் ஏன் பிறரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது அது ஒரு வித போலித்தனமான நம்பிக்கையைத் தருகிறது. ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் தான் வாழ்க்கையின் சாரம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்வில் பிறரின் ஒப்புதலுக்காகவும் (Approval) ஏற்றுக்கொள்ளுதலுக்காகவும் (Acceptance) ஏங்குகிறார்கள் அதனால்தான் பெரும்பாலோனோருக்கு சமூக ஊடகங்களில் பிறர் போடும் லைக்குகளையும் மற்றும் பிறர் அவர்களை ஃபாலோ செய்வதும் மிகவும் பிடிக்கிறது. மேலும் சமூக ஊடகங்களில் நிறைய நண்பர்கள் இருப்பது ஒருவித திருப்தி அளிக்கிறது.
உலகெங்கும் 1000 நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நமக்கு மிக அருகில் இருக்கக்கூடிய நண்பர்களையும் உறவினர்களையும் மறக்கச் செய்கிறது இந்தச் சமூக ஊடகங்கள்.
சமூக ஊடகங்கள் நம் மனதுக்குத் தேவைப்படும் ஒருவித நம்பிக்கைையையும் மற்றும் பிறரின் ஒப்புதல், ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டு அதை மேலும் மேலும் நாம் அதைத் தேடிச் செல்ல அதன் வடிவமைப்புகளை உறுதியாக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றது.
இதை நாம் நன்கு புரிந்து கொண்டாள் வளர்ந்து கொண்டே போகும் இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகாமல் எந்த மாய வலையிலும் சிக்காமல் அதனை நம் முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நமக்கு வேண்டிய பல தங்க மீன்களைப் பிடிக்க முடியும்.
இதற்கு நம்மிடம் விழிப்புணர்ச்சியும் கவனமும் இருந்தால் போதும்.
It was night
Ten past eight
Dim streetlight
Very less sight
There was a fight
He kept left
And he was right
She kept right
She wasn’t right
Clouds moved at height
There was sudden light, moonlight
That’s when their eyes met straight
Then there was no fight
It was love at first sight
“The End,” wrote the playwright
அவள் வரைந்த பறவை
என் அருகில் இருந்தது
மின்விசிறி சுழல பறந்து சென்றது
பச்சை காடு
பச்சை காடு
நடுவே ஒரு ஆறு
மலை மேலிருந்து இறங்கி வரும் நீரு
பேரழகு, அமைதி உண்டு பாரு
ஒரு மனிதன் அங்கு சென்றால் போதும்
எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
ஒரு முயல் இரண்டு நாய்
முயல் ஒன்றை நாய் இரண்டு துரத்த
மூன்றும் வெகுதூரம் ஓடி
தன் உயிர் காக்க
புதர் ஒன்றில் முயல் மறைந்தபோது
மிக முயன்று, செயலிழந்து
நின்றது அவ்விரு நாயும்
நம் வாழ்வில் சில பெருந்துயரம்
நம்மைத் துரத்தும் போது
இந்த முயல் போலே நாம் முயன்று
அதில் சிக்காமல்
அதைச் செயலிழக்கச் செய்து விடுவோம்
அத்துயரத்தை வென்றிடுவோம்
சீவிய முடி கலைந்த ஒரு அழகிய பெண் முகம்
முடி சூடிய மன்னர் பலர்
சரண் அடைவார்
முடி கலைந்த உன்னிடம்
ரோஜா மலர்
உன் செடியில் முட்கள் இருந்தும்
உன்னை ரசிக்கும் நான்
ஏன் சக மனிதர்கள் வாழ்வில்
நிறைகள் பல இருந்தும் குறைகளையே காண்கின்றேன்
ஸ்கிப்பிங் விளையாடிய இரு பெண்கள்
நான் குதிக்க நீ தரை மிதிக்க
நான் தரை மிதிக்க நீ குதிக்க
நம்மை சுற்றி வந்தது ஒரு கயிறு
நம் நட்பு பெரிதென்று உலகம் அறிந்து
அது சுழன்ற பொழுது
காலம் ஓடி நமக்கு வயதாகி
நட்பு இருந்தும் கயிறு இருந்தும்
நாம் குதிக்க மறந்தோம் தோழி
பகிர்ந்து உண்டு வாழ்
பகிர்ந்துண்டு வாழ்
என்று அவன் கூற
அது என்ன?, அவன் மகள் கேட்க
கை நிறைய பொரி எடுத்து
படித்துறையில் இருந்தவாரே
பொரி அதனை நீர் தன்னில்
அவன் தூவ
தங்கநிற மீன்கள் நீந்தி வந்து
வாத்துக்கள் தன் கால் அசைத்து நகர்ந்து வந்து
அப் பொரி தன்னை உண்டபோது
மகள் அவள் மெல்ல புரிந்துகொண்டாள் தன் வாய் தன்னில் பொரியினை மென்றவாறே…
கோடு
வருவதையும் போவதையும்
அது பிரிக்கும்
ரோட்டின் நடுவே ஒரு கோடு
நாம் இவ்வுலகிற்கு
வந்து போவதை
எது பிரிக்கும்
கோடிட்டு காட்டுக
அக்கோடு
இமயன் பிறந்தநாள்
இமயா நீ
கற்கத் தொடங்கும் போதே இணையத்துடன் இணைந்தாய்
உனக்கு யாரும் இணையில்லாத படி
வாழ்வில் வளர்வாய்
பனகலின் கொடி தன்னை
இமயத்தில் நடுவாய்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு
Worry is a misuse of Imagination
கவிதை – 1
அவர்கள் இழந்த தருணம்
அரசுப் பேருந்தில் மலை வழிப் பயணம்
பேருந்தில் உள்ளவருக்கோ
தூக்கத்தில் கவனம்
தூக்கம் அது தந்த கனவில்
சென்றது அவர்கள் மனம்
வேறொரு பயணம்
துக்கம் என்னவென்றால்
இழந்தார்கள் நான் மலை அழகியின் அழகை ரசித்த பல தருணம்
கவிதை -2
உன்னழகை நீ பார்த்தால்
மூக்குத்தி சரிசெய்து
உன்னழகை உன் கையில்
நீ பார்ப்பது ஏனோ ?
கண்ணாடியில் பார்த்தால்
உன் அழகைப்பார்த்து
உன் கண்ணே பட்டுவிடும் என்று தானே!
கவிதை – 3
தாய் சேய்
இவ்வுலக நாத்திகர்கள்
ஆத்திகர்கள் ஆன தருணம்
இவ்விரு தெய்வங்களை
ஒன்றோடு ஒன்று பார்த்தபொழுது
இருள் படர்ந்த இரவு
இன்று இல்லை நிலவு
ஊர் தூங்கி காண்கிறது கனவு
அமைதியானபொழுது
தடியடித்து ஒலி எழுப்பி ஊர்காவலரின் வரவு
இரவின் அமைதியைக்
குலைத்தபொழுது
நான் கொடுத்தேன் ஒரு வாக்குறுதி
நீ அத்தடி துறந்தால்
நிச்சயம் உனக்கு நாளைக் காலை
அமைதிக்கான நோபல் விருது