
அறிவியல் துளிகள் – 21/23

வாசிப்பை நேசிப்போம், சுவாசிப்போம்.
நூல் :
எனக்குள் என்ன நடக்கிறது
ஆசிரியர்:
Dr. சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம்:
உயிர்மை பதிப்பகம்
வேகமாக நகரும் நம் வாழ்க்கையில் நாம் பல விதமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறோம். அது நமக்கு எண்ணற்ற மன ரீதியான சிக்கல்களை உண்டாகிறது. மனம் சார்ந்த பிரச்சனைகள்பற்றிய விழிப்புணர்வு பொதுவாக மக்களிடத்தில் இல்லாததால் மனரீதியான சிக்கல்களைக் கையாள்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் நம்மைப் போல் உள்ள மனிதர்கள் மனம், உளவியல் மற்றும் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மன ரீதியான சிக்கல்களைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை / பதில்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார்.
மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை. நம் மனதைச் செம்மையாக்க இந்த நூல் பெரிதும் உதவும்.
அறிவுடையார் எல்லாம் உடையார்
அறிவிலார் , செயற்கை நுண்ணறிவு கொண்டு எல்லாம் பெறுவர்.
இலக்கு என்று ஒன்று இருந்தால்
நம் மனதுக்கு அது தெளிவாகத் தெரிந்தால்
நம் முயலாமை விலகும்.
முயல் ஆமை போல் இருப்போம்
முயலின் வேகத்துடனும்
ஆமையின் நிதானத்துடனும்.
படம் : WhatsApp
அரை நிறையாகுமா ?
ஆகும் சான்று இங்கே
சக்தி இழந்தது
ஆனால்
முக்தி பெற்றது
இளநீர்