
நீரிலே நீ இருப்பதனால்
அழிந்திடுமே உன் தலையெழுத்து
பிறகு ஒரு புழுவுக்கு ஆசைப்பட்டு
பிடிபட்டு பிறருக்கு உணவு ஆகுவது
யார் அழைத்து?
நீரிலே நீ இருப்பதனால்
அழிந்திடுமே உன் தலையெழுத்து
பிறகு ஒரு புழுவுக்கு ஆசைப்பட்டு
பிடிபட்டு பிறருக்கு உணவு ஆகுவது
யார் அழைத்து?
படம் :: திரு எஸ் அய்யாரப்பன்
என்னையே நான் நம்பி
என்னை நான் விரும்பி
என்னுடன் நான் நடக்கும்போது
பாலம் அது கடக்கும்போது
கீழே ஆற்றுநீரில்
என்னுடன் இருக்கும்
என்னை நான் காணும்போது
அதில் எனக்கொரு பெருமை
அங்கில்லை தனிமை
வேறென்ன ? எல்லாமே இனிமை.
எல்லா முயற்சிகளும் தருவதில்லை வெற்றி
ஆனால் எந்த வெற்றியும் வருவதில்லை, இல்லாமல் முயற்சி
வெற்றிதான் மகிழ்ச்சி என்றால் அது என்றாவது தான்
முயற்சிதான் மகிழ்ச்சி என்றால் அது தினம் தினம் தான்
முடியாது என்பார் ஆனால் நீ தினம் தினம் முயற்சித்துப் பார்
முடியாதது முடிந்துவிடும்
உன் வாழ்வில் தொடர் முயற்சி என்பது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிடும்
பின் மகிழ்ச்சி அது மிகையாக வந்துவிடும்
வெற்றி அது தன் பொறுமை இழந்து உன் முன் அனுமதி கேட்டு வந்துவிடும்
பொறுமையாக உன்னை ரசித்து நான் குடித்து என் நாள் தொடங்கும்
பின் நாள் முழுவதும் அவ்வப்போது நீ வந்து சுடச் சுட நீ என்னுள் சென்று சுறுசுறுப்பை நீ எனக்குத்தந்து உற்சாகம் நான் பெற்று மகிழ்வதுண்டு
இவ்வெள்ளியை என் கைபிடிக்க
தங்கத்தை நழுவ விட நான் தயார்
இவையெல்லாம் அது
ஒருசேர காண்பதரிது
சில நோய் தீர்க்கும்
சில ருசி சேர்க்கும்
நோய் தீர்க்க
ருசி சுவைக்க
தெரிய வேண்டும் உனக்கு
எதனை எத்துடன் எந்நேரம்
எப்படி, அது சேர்த்தால்
எது நோய் தீர்க்கும்
எது சுவை கூட்டும் என்று
உன் பாட்டியிடம் கேள்
ஒரு பாட்டுப் பாடி
சொல்லிவிடுவாள்
அந்த ரகசியத்தை.
நான் சொல்லவில்லை மிகையாக
தங்கம் அது
உன் கழுத்தில்
உன் காதில்
இருக்கும்போது நகையாக
அதன் மதிப்பு மேல் உயரும்
உன் புன்னகையாலே
என் ஆசை அது
நேரத்தைக் காலால் மிதித்து
ஓரிடத்தில் அதை நிறுத்த வேண்டுமென்று
நீ செய்து விட்டாய்
கால்களை எடுத்து விடாதே
நேரத்தை நகர விடாதே
நீ மேல் இருந்து
கீழ் பார்த்தபோது
நான் கீழ் இருந்து
உன்னைப் பார்த்தேன்
காற்றடிக்க
மரக்கிளைகள் அசைய
நீ சென்றுவிட்டாய் பறந்து
நான் உன்னை நினைத்து
மரக்கிளைகளின் நடனத்தை ரசித்து
அங்கேயே நின்று விட்டேன்
என்னை மறந்து
நான் யார் என்று தெரிந்துகொள்ள
என்னால்தான் என்ற எண்ணத்தைக் குறைத்துக்கொள்ள
பிறரால் தான் நான் என்பதைப் புரிந்துகொள்ள
நான் நான் என்பதைக் கடந்து செல்ல
சிலசமயம் அது வேண்டும் எனக்குத் தனிமை
பொறுமையாக அதில் நான் இருந்தால்
அந்த” நான்” கரைந்து “நாம்”
மலர்ந்திடுதே அது இனிமை