
வாழ்க்கையை வெறுத்த
நான்கு பேரு
அவர்களுக்கு ஆளுக்கு ஒரு
குதிரை உண்டு
துன்பத்தை மறுத்து வாழ
ஒரு இடத்தைத் தேடிக் கொண்டு
குதிரைமேல் ஏறியமர்ந்து
சில வருடங்கள்
பல ஊர்கள் சுற்றி
கிடைக்கவில்லை அவர்களுக்கு வெற்றி
நோந்து போயி நாலு பேரும்
நம்பிக்கையை இழந்து
“நான்தான்” என்பதை மறந்து
ஆசை எல்லாம் விட்டுவிட்டு
பற்று அதை தூக்கிப்போட்டு
மௌனமாக இருந்தபோது
அவர்கள் இருந்த இடம்
தேடி வந்த இடமாயிற்று
துன்பம் எல்லாம் ஓடிப்போச்சு.
இன்பதுன்பம் சமமாயிற்று