காரிகை

ஆயிரம் கால் மண்டபம்
எனக்குள் ஆனந்தம் பொங்கக் கொண்டாட்டம்

தூண் பின்னே ஒரு காரிகை
அவளைப் பார்த்தாலே ஒரு நம்பிக்கை

உண்டா ? இல்லையா? இனி இதுவல்ல பிரச்சனை

அவள் தரிசனம் தேடி நித்தம் செல்வேன்
விடா முயற்சி செய்து அவள் இதயத்தை வெல்வேன்

தனக்குத் தானே துணையாக

PC – GinGangraphy ( Internet Source)

உழைத்துக் களைத்த உடம்பு
பல உறவு விதைகளை மரமாக்கி
அதன் நிழலில் தான் நில்லாமல்
தனக்குத் தானே துணையாக
அவர் கட்டிய வீட்டுத் திண்ணையில்

மகிழ்ச்சியில் மூழ்கு.

அன்புத்தங்கை புதுமனை புக
அங்குச் சொந்த பந்தங்கள் சூழ

பாசம், அன்பு, நேசம் நிரம்ப
பேரானந்தம் அங்கே இருக்க விரும்ப

ஆட்டம் பாட்டம் கேலிப்பேச்சு
மகிழ்ச்சி பொங்க நேரம் போச்சு

அனைவரின் அன்புப்பேச்சு
செவிக்கு விருந்து
இடையே வயிற்றுப் பசி போக்க அறுசுவை விருந்து

மூன்று தலைமுறைகள் ஒன்று சேர
நாலாம் தலைமுறை இளம்பிடி ஒரு போட்டியை நடத்த
அங்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல
எல்லாம் ஒன்றுகூடி அமர்ந்து போட்டியை ரசிக்க
சமோசா, காபி வந்து சேர்ந்தது
நேரம் மாலை ஆனது
உறவுகள் விடை பெறும் நேரம் வந்தது
பெரியம்மா சுற்றத் திருஷ்டி எல்லாம் கழிந்தது

கூடிய உறவுகள் கலைந்து சென்றது
கூடிக்களித்த சந்தோஷம் மனதில் நின்றது
அந்த நாளை இனிதே வென்றது

உறவுகள் நாம் பெற்ற வரம்
நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் உரம்
நமக்குக் கைகொடுக்கும் பலம்
அதைப் போற்றி காத்திடுவோம் தினம்

தங்கையே நீ வருடம் ஒரு வீடு வாங்கு
அனைவரையும் அழைத்து அந்த மகிழ்ச்சியில் மூழ்கு.

முயன்று பார்

தோல்விகளைச் சந்திக்காதவர் இவ்வுலகத்தில் யார் ?

இன்னும் ஒருமுறை முயன்று பார்

உன் எண்ணங்களுக்கு நல் வண்ணம் தீட்டி ஊக்கம் கொள் என்கிறது முப்பால்

தோல்வி நமக்குத் தரும் பாடம் என்ன ?
விடை கண்டால்…….

இன்னும் கொஞ்சம் முயன்றால்
மனச் சோர்வின்றி உழைத்தால்
வெற்றி மழை பெய்யும் நிச்சயம்

நாம் அதில் நனைந்து விட நடக்கும் அதிசயம்

வருவது வராதது

வருவது வந்தே தீரும்
வராதது வராமல் போகும்

எல்லாம் நம் எண்ணங்களின் தோற்றம்
வேண்டும் நம் எண்ணதில்  மாற்றம்
அதுதான் நம் நிலையை நாம் விரும்பியவாறு மாற்றும்

உன் நிலைதான் அனைவருக்கும்

எந்நிலையில் நின்றாலும்

எக்கோலம் கொண்டாலும்

ஒரு நாள் உன் நிலைதான் அனைவருக்கும்

மண்ணோடு மண்ணாக….

வாழ்ந்த நிலத்திற்கு உரமாக….

அதுவரை இருப்போம்

பிறருக்கு ஒளிரும் விளக்காக

தன்நம்பிக்கை

அகண்ட வானத்தை சிறு குடை மறைக்கும்
மழைத்துளி படாது அது காக்கும்

பெருந்துயரைய் யேல்லாம் நம்  தன்நம்பிக்கை தளர்த்தும்.
இடையே ஏனைய சிறுந்துயரெல்லாம்  தானக கரையும்

ஒரு கணம் நின்று விடு

ஒரு கணம் நின்று விடு
சொல்வதைக் கொஞ்சம் கேட்டு விடு

உறுதியுடன் இருந்து விடு
வென்று விடுவேன் என்று எழுந்து விடு

அனைவரும் ஒன்றென்று கருதி விடு
வேண்டிய சக்தியெல்லாம்
உன்னுள் உண்டென்று நம்பி விடு

அச்சத்தைத் துச்சமென மதித்து விடு
புதிய சரித்திரம் ஒன்றைப் படைக்க எழுந்துவிடு

முனைப்பையும் துடிப்பையும்
பெருக்கி விடு
களைப்பையும் மனச் சலிப்பையும் கலைத்து விடு

உன்னுள்ளே நல்லெண்ணங்களை விதைத்து விடு

உன் மாற்றம்
இவ்வுலகிற்கே புதிய தோற்றம்
என்று நினைத்து விடு

உன் அன்பால் இவ்வுலகையே
அசத்தி விடு
அன்றன்றே முழுவதுமாக
வாழ்ந்து விடு

வெறும் கதை அல்ல உன் வாழ்க்கை
அது ஒரு கீதை.