
அறிவியல் துளிகள் – 144/23

எத்திசையிலும் உன் இசை
பலர் செவிகளுக்கு விருந்தாய்
பலர் அமைதிக்குப்
புத்தனாய்
பலர் பயணங்களில் துணையாய்
பலர் தனிமைக்கு இனிமை தருவதாய்
பலருக்கு உற்சாகமூட்டும் சக்தியாய்
பலருக்கு ஆறுதல் தரும் மருந்தாய்
பலரை உறங்க வைக்கும் தாலாட்டாய்
இசைக்கிறது
இதன் விசை என்றும் குறையாது
உன் இசை என்றும் மறையாது.
ரஞ்சித் சிங் ( 1780 – 1839 )
சீக்கிய பேரரசின் முதல் மகாராஜா. இவர் ஷேர்-இ-பஞ்சாப் ( பஞ்சாப் சிங்கம் ) என்று பிரபலமாக அறியப்பட்டவர்.
தனது பத்தாவது வயதில் முதல் போரில் ஈடுபட்ட இவர், தொடர்ந்து ஆப்கானியர்களை எதிர்த்துப் பல போரிட்டு வெற்றிவாகை சூடி தனது 21 ஆம் வயதில் பஞ்சாப் பேரரசின் மகாராஜா ஆனார்.
இவர் ஆட்சிக் காலம் பல சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல் , உள்கட்டமைப்புகளில் முதலீடுகளைக் கொண்டு சீரும் சிறப்புமாக அமைந்தது. மேலும் இவரது அனுசரணையின் கீழ் பல முக்கிய குருத்வாராக்கள் மறுகட்டமைக்கப்பட்டு , சீக்கிய கலாச்சாரத்தை வளர்ந்தோங்க வழி செய்தது
2020 ஆம் ஆண்டில் “பிபிசி வேர்ல்ட் ஹிஸ்டரிஸ் இதழ் ” நடத்திய உலகளாவிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சிங் ” எக்காலத்திலும் சிறந்த தலைவர்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தன் சிறு வயதிலேயே பெரிய அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு தன் இடது கண் பார்வையை இழந்த போதும் தன் வாழ்வில் பெரும் சாதனைகளைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.