புத்தாண்டு 2024

இன்னொரு ஒரு புத்தாண்டு
வெற்றிக்கொடிகட்ட
மற்றும் ஒரு வாய்ப்பு

தடைகளைத் தகர்த்து
முன்னேறு
உன் இலக்குகளை
அடைந்து கொண்டாடு

விதியா? மதியா?
வேண்டாம் கவலை
விடாமுயற்சி என்ற விதி
என்றும் தரும் தக்க வெகுமதி

வள்ளுவனைப் போற்று
பாரதியைப் படி
கம்பனைத் தேடு
பாரதிதாசன் கவிதை கேள்
நல்வழி தெரியும்
தமிழ் உனக்கு ஊக்கம் தரும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நீ என்றும் இதை மறவாதே தோழா

இப்புத்தாண்டில் நீ பெறும் வெற்றி
அதில் அடங்கட்டும் பலரின் வெற்றி
நீ உயரப்
பலர் தலை நிமிரட்டும்
இவ்வுலகம் உன்னைப் போற்றட்டும்

வாழ்த்துக்கள்

                                     ப. இராசேந்திரன்

2024

In twenty twenty-four,
Embrace each hour, explore.
Joy and happiness, let them soar,
Your time to score, forevermore.

The best years ahead, not done,
2024, a rising sun.

Soar to heights, share the light,
A very happy New Year, take flight.

Opportunity awaits, don’t miss,
A year of joy, sealed with bliss.

                                 P Rajenthiran

Good bye Captain

உன் உழைப்பால் உயர்ந்தாய்
பிறர் உழைப்பை மதித்தாய்

நீ அட்சய பாத்திரம்
அன்பு உன் வெற்றியின் மந்திரம்

நீ உழவன் மகன்
பலர் உள்ளம் கவர்ந்த சத்திரியன்

அரசியல் களம்
அதிலும் காட்டினாய் உன் பலம்
எதிர்க்கட்சித் தலைவர் ஆனாய் ஒரு தரம்

நீ வெள்ளை உள்ளம் கொண்ட
கருப்பு எம்ஜிஆர்
உதவிக்கரம் கொடுப்பதில் உன்னை மிஞ்சியது வேறு யார் ?

எமன் அழைக்கச் சென்று விட்டாயோ ?
Will you come back ரமணா ?

எம்ஜிஆர்

கொடுத்துக் கொடுத்து
சிவந்த கரம்
தலைவர்களில் அவர்
தனி ரகம்

அண்ணாவின் இதயக்கனி
திராவிடத்தின் சுடரொளி

நாளை நமதே
இந்த நாளும் நமதே
என்று உரைத்த
அவர் யார் ?

எம்ஜிஆர்

பெரியார்

மூடநம்பிக்கையை அறுத்து
தன்னம்பிக்கை கொடுத்தவர்

சாதிகளைச் சாய்த்து
சமத்துவம் கண்டவர்

பகுத்தறிவு தந்து
தன்மானத்துடன்
தமிழனைத் தலை நிமிர வைத்தவர்

தாடியுடன் கைத்தடி
கொள்கையில் அதிரடி
தமிழனை உயர்த்திவிட்டார் பல அடி

மறைந்தும் நிமிர்ந்து நிற்கிறார்
இன்றும் அவர் வகுத்திடப் பாதையில் பலர் நடக்கிறார்

தனித்துவம்  கொண்ட பெரியவர்
பெரியார் என்ற அரியவர்

சூரிய மின்னாற்றல்

இனி நீ உதித்தால் போதும்
புகையின்றி வாகனங்கள் ஓடும்

புதை படிவ எரிபொருள்கள் எரிந்தது போதும்
இனி உன் சக்தி இவ்வுலகை ஆளும்

மின்சாரம் உற்பத்தி
உன் வெப்பநிலை கொண்டு

அது புவிவெப்ப நிலையைக் குறைக்கிறது
இது இயற்கையின் மாபெரும் தொண்டு

இனி நீ உதித்தால் போதும்
இரவின் இருள் கூட பயத்தோடும்