ஆழ்ந்த உறக்கம்

துக்கம் கரையும் நேரம்
மறையும் மன பாரம்
கவலைகள் இளைப்பாறும்

இருந்தும் இல்லாதவனாய்
எல்லாம் மறந்து
இவ்வுலகைத் துறந்து
“நான்” என்றதை இழந்திருக்கும் நேரம்

அமைதியே அமைதியில் இருக்கும்
எண்ணங்கள் மாய்ந்து போகும்
இருள் வெளிச்சத்தை வெல்லும்
சுவாசிக்கும் காற்று மட்டும்
நம்முள் சென்று சென்று திரும்பும்

இவ்வுலகின் துக்கங்கள் வெல்ல முடியாத ஒன்று தூக்கம்


இன்று

கண் விழித்துப் பார்த்தேன்
இரவது முடியும் நேரம்

வெகுதூரத்தில் ஒரு சேவல் கூவ
பறவைகளின் இனிய சத்தம்
அமைதியை கலைத்தது மெதுவே

இருளை வெளிச்சம் துரத்த
என் தூக்கத்தை வென்று
எழுந்தேன்

புதிதாய் பிறந்த நாளை
வரவேற்கும் விடியற்காலை

புத்துணர்ச்சி நிரம்பியது என்னுள்
இன்று

ஒவ்வொரு கணமும் வாழ்வேன்
என் கனவுகள் நனவாகும் திருநாள்
வரும் காலங்களை நிர்ணயிக்கும் பெருநாள்

என் நிலையும் இலைபோல சிறப்புறுமோ?

உன் கண் பட்டது
மரணித்த இலை உயிர்பெற்றது

அதன் ரேகைகளைப் பார்த்தாலே தெரிகிறது
அதன் எதிர்காலமும் ஒளி பெற்றது

காத்திருக்கிறேன் உன் கண் படுமோ
என் நிலையும் இலைபோல சிறப்புறுமோ?

Present – That turns our future to past.

It is 1.30 am, and I am alone, awake, and silent. I only hear the ticking of the clock and that of the fan working overtime (Summer!). I am experiencing complete peace. Is it because I am alone amid silence? Is peace, then, a function of loneliness and silence?

My mind is also calm. Is it because there are fewer things to distract me now? I am away from my mobile phone and am sure that the mobile phones of my contacts are also resting now. It really feels good to be free from the clutches of my mobile phone. Is that the reason most of the saints prefer to be alone in a calm place free of distractions?

Most of the time, I am fully in the present moment without any thoughts, just observing every moment as it unfolds. Time moves very slowly, and, at times, I feel it is still. It is a different experience altogether when you are fully in the present; there is no burden of the past and anxieties of the future.

I started to examine what really is the present moment. It appeared to me as just a transitory moment which erodes my future and gets accumulated with my past. When you are fully immersed in such transitory moments, there is a sense of realization which is difficult to explain but pleasant to experience; it gives you absolute peace and genuine joy. But it vanishes the moment you step out of it and get back to your past or future thinking.

Good dreams about our future also give us a sort of imaginary pleasure. But it is not real until such a time as it is realized. But for most of us, it seems that imaginary joy is filling; the very thought of thinking of something big, or thinking of ourselves as a hero, in an imaginary life situation makes us happy. A series of constructive thoughts makes us, no doubt, and vice versa breaks us. When we can’t avoid thinking, what is harm in filling ourselves with constructive and positive thoughts? At least we can experience imaginary joy rather than letting ourselves be subjected to less constructive thoughts taking control over us and making us suffer.

But to experience real joy, we need to confront reality and fully be with it, enjoy and experience every transitory moment that turns our future into our past.

முதலாளி

கடல் நீர் வந்து முத்தமிடும் நித்தம்
அது எழுப்பும் ஒலியோ அழகிய சந்தம்
அதைத் தவிர இல்லை அங்கு வேறேதும் சத்தம்

நிறைய வளர்ந்த தென்னைகள்
கொண்ட நில அமைப்போ ஒரு திண்ணை

தென்னையே குடையாய்
அதன் கீழ் சதுர மேஜை, நாற்காலிகள்
அங்கே இளைப்பாறும்
நம் உழைப்பாளி (முதலாளி )

ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் வருவார்
பலருக்கு புதுக் கட்டிடங்கள் கட்டித் தருவார்

வானமே எல்லை

வானமே எல்லை
இனி எனக்கது இல்லை

அழகிய வானம்
கடல்நீரில் காண வந்தது தன்தேகம்
அந்நொடி பட்டது என் பாதம்
வெட்கம் உற்றது வானம்

கொண்டது வேகம்
விரைவில் கலைந்து
எல்லாம் நகர்ந்து
ஆதவனை மறைத்து
உதவியது மேகம்