தென்னை மரம் காற்றில் அசைந்து”ஆம் ” என்றது.

வீட்டுத் திண்ணையில் சும்மா அமர்ந்து
தென்னை மரத்தைப் பார்த்தேன்

ஆதவனை மறைத்து நிழல் தந்தது
தாகம் தீர்க்க இளநீர் தந்தது
பசியாற தேங்காய் தந்தது
உணவு சமைக்க விறகு தந்தது

“சும்மா அமர்ந்து இயற்கையை பார்த்தால்
எல்லாம் கிடைக்குமோ ?”
என்று நான் நினைக்க

தென்னை மரம் காற்றில் அசைந்து
“ஆம் ” என்றது.

நண்பகல் நேரத்து மயக்கம் – படம்

நண்பகல் நேரத்து மயக்கம்
அமைதியான கிராமத்தில்
ஒரு திடீர் குழப்பம்.

ஜேம்ஸ் ” சுந்தரம் ” ஆனான்
மாய்ந்தவன், திடீரென வந்து
விட்டுப்போன தன் வாழ்க்கைத் தொடர்ந்தான்

அவன், அவனாக வாழ்ந்தான்
ஆனால் ஊருக்கு அவன் இல்லை ” அவன் “.

காலம் நகர்கிறது
அவன் ” அவன்” இல்லை என்று உணர்ந்தான்
ஜேம்ஸ் ” ஜேம்ஸ் “ஆக ஆகி
தன் வாழ்க்கைப்  பயணத்தைத் தொடர படம் முடிகிறது

மம்மூட்டி தன் நடிப்பாலே வென்றார்
இருந்தும் அவர் இல்லை, கதாநாயகன்
திரைக்கதையும் & இயக்கமும் தான் !

பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

ஒரு படம், ஒரு கதை – 2

ஒரு படம் ஒரு கதை

நீண்ட காலம் கழித்து நால்வரும் சந்தித்தனர். இரவு வெகுநேரம் அங்கு அமர்ந்து உரையாடினர். ஒன்று சேர்ந்து நிறையச் செய்ய முடிவெடுத்தனர்.

காலை எழுந்தவுடன் அவர்கள் போதை தெளிந்தது. உரையாடியது அனைத்தும் மறந்தது