
அறிவியல் துளிகள் – 141/23

பெரிதெல்லாம் சிறிதாயிற்று
சின்னஞ்சிறு புள்ளியாயிற்று
ஒரு பொருட்டே இல்லேனாயிற்று
மேலிருந்து பார்த்தபோது
இதை நான் உணர்ந்த போது
கீழே இறங்கி வந்தபோது
என் அகங்காரம், தற்பெருமை , திமிர்
அதுவெல்லாம் என்னை விட்டுப் போயிற்று
Everything big became small
It became a tiny dot
Without any significance
When viewed from above
When I realized this
When I came down
My ego, pride, arrogance
All that left me
13 ஏப்ரல் 1919, அன்று பிரிட்டிஷ் அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் R. EH டயரின் உத்தரவின் பெயரில் பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் , இந்தியச் சுதந்திரத்திற்குக்காக்கவும் அமைதியான முறையில் போராடிய பெரும் திரளான மக்கள், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை
ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது.
ஜாலியன்வாலாபாக் இடத்தின் அமைப்பு எவ்வாறென்றால், ஒரே ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே உள்ளே வரவோ, வெளியேறவோ முடியும். அதன் மற்ற மூன்று பக்கங்களும் கட்டிடங்களால் சூழப்பட்டிருக்கும்.
அங்குப் போராடக் கூடியிருந்த மக்கள் வெளியேறுவதைத் தன் துருப்புக்கள் கொண்டு தடுத்த ஜெனரல் டயர், தப்பி ஓட முயன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்த்துச் சுடும்படி ஆணையிட்டார். துருப்புக்கள் தங்கள் வெடிமருந்துகள் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூர சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேலானவர் கொல்லப்பட்டார்கள், மேலும் சுமார் 1,200 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைக்குப் பிரிட்டன் இன்று வரை முறையான மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை, ஆனால் 2019 இல் தன் “ஆழ்ந்த வருத்தத்தை” வெளிப்படுத்தியது.
இந்த இடம் இன்றும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான தேசிய நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. இது அமிர்தசர் நகரில் பொற்கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
இன்றும் அங்கு, துப்பாக்கிச் சூடு நடந்தபோது சுவர்களில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட சேதங்களைக் காண முடியும்.
அங்குச் சென்று பார்த்தால் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு கொடுத்த விலை என்ன என்பது புரியும்.
அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் இன்றைய நிலை என்ன ?
ஒன்றுடன் ஒன்று
உரையாடுவது
எனக்கு நல்லா புரிந்தது
மீண்டும் மன்னர்
ஆட்சியாம்.