Do you agree ?

Every closed eye
Is not sleeping
Every open eye
Is not seeing

Some are weeping
Some are yearning

Some filled with love
Some with rage

Some pulls you toward
Some pushes you further

Some look beyond
Some struck with the past

There are three
It’s only she I see

We only see
What we want to see

Do you agree ?

Meditation

He sat on the rock.
To meditate
No one between
Neither to negotiate
Nor to mediate

With eyes closed
And chin upwards
He directly connects
with the universe

He found the truth himself.
That life is empty and meaningless.
And if there is any meaning,
It is what he gives
Till such times he lives

அன்பு

முயல்களும் முயல்கிறது
சிறு பிஞ்சும் உதவுகிறது
அன்பு  இணைக்கின்றது
இது என் நெஞ்சை உருக்கின்றது

இம்முயற்சியில் அந்தப் பிஞ்சு தோற்றால் என்ன ?
அவன் அன்பு அந்தப் பண்பு நிலைத்திடுமே

அல்ல, அன்பு காகித தத்துவம் 
அது உணரவேண்டிய வாழ்வின் அற்புதம்

குழந்தையாய் மாறுவோம்
நம் அன்பைப் பகிர்வோம்

Those rabbits try their best.
Little boy lends his helping hand.
Love connects
It melts my heart.

Little boy will fail, so what?
The love he exhibits will remain.

Love is not a paper philosophy.
It is the wonder of life to be experienced.

Let us become kids.
Let us share our love.

நான் நீயான போது

நான் நீயான போது

மலை மீது ஏறி
கண்மூடி அமர்ந்து
பிற நினைவு துறந்து
உன்னை நினைத்தபோது

நான் அங்கு இல்லை
நாள் கிழமை தெரியவில்லை
புரிவதற்கும் ஒன்றுமில்லை

நேரம் அதை வென்றேன்
நிம்மதியை கொண்டேன்
“நான்” அதை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
நீயாகி மகிழ்ந்தேன்.

When I became you

When I climbed the hill
And sat there, eyes closed.
Renouncing other thoughts
Thinking about you

I was not there.
Not conscious of date and time
There was nothing to be understood.

I surpassed the time.
I was relaxed.
I lost the “I” in me.
I became one with you.
And I was in a state of bliss.

Let me think.

K V Rao

Let me think.
I won’t let it sink.

Crisis on the brink
I will find the resolution link.

Life is not to shrink.
Neither let it stink.
But to rethink
And create history to ink

I will out-think
To find the resolution link.
Then I will enjoy my drink.

புழல் ஏரி

புழல் ஏரி

சிறு சிறு மழைத்துளிகள்
பெருந்திரளாய் சேர

ஏரியின் கொள்ளளவு
முழுவதும் நீராய் மாற

மழை தந்த மேகம்
மனத் திருப்தியுடன் அதைப்பார்க்க

சிங்காரச் சென்னையில்
வரும் வருடம்
குழாய்களில் காற்றல்ல , குடிநீர்தான்

அதன் நீருக்கான

ஏக்கம் தீர்க்கும் நீர்த்தேக்கம்

.

Golden Hour

Photo Shared by : Sachin Bakle

People gather.
All together
At the golden hour

It is on a hill top.
To see that which no one can stop
The Sun’s light
What a sight.
And it gives them delight.

It is spread in the sky.
The joy of whisky high
There they are the lucky few.
Let all get this golden view.

நிலா

என் தூரத்து உறவு
நான் தினம் பார்க்கும் நிலவு

இரவில் தான் வருவாள்
அமைதியை இரவல் தருவாள்

ஊர் உறங்கிய பின்னும்
எங்கள் சந்திப்பு தொடரும்

வெறும் பார்வையினாலே
பல கருத்துக்கள் பரிமாறும்

சொல் எதுவும் வேண்டாம்
மௌனமொழி அது போதும்

மறைந்தாலும் வருவாள்
தினம் தினம் புது நம்பிக்கை தருவாள்

அவள் வந்தால் போதும்
என் கவலைகள் எல்லாம்
செலவாக்கிப்போகும்.

திரு. இளநகை பிறந்தநாள்

முதல் மொழி கண்ட பெருந்தகை
தமிழ் என்றால் முகத்தில் புன்னகை
நல்ல புத்தகங்கள் அவருக்குப் பொன்னகை

எட்டுத் திசைக்கும் செல்ல வேண்டும் எட்டுத்தொகை
இந்த இலக்கில் அவருக்குப் பெரும் நம்பிக்கை

தமிழுக்கு கைகொடுக்கும் கை
அவர்தான் இன்று பிறந்தநாள் காணும்
நம் இனிய தோழர் இளநகை

வாழ்த்துக்கள்.