நாமும் தான் !

பனைக்கு பின்னால் சூரியன்
என்பது வெறும் பிம்பம்

பனை, சூரியனைச் சுற்றும்
பூமியின் மிகச் சிறிய அங்கம்
நாமும் தான் !

தொடக்கங்கள்இல்லையென்றால்  முடிவுகள் ஏது ?

நான் நினைப்பதொன்று
ஆனால் நடப்பதொன்று

என் அறிவுக்கு உட்பட்ட
திட்டங்களைத் தீட்டுகிறேன்

இயற்கை என் அறிவுக்கு எட்டாத திட்டங்களை தீட்டுகிறது
நடத்திக் காட்டுகிறது

என் அறிவு விரிகிறது
அனுபவம் கூடுகிறது
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது

முயற்சிகளில் இல்லை வெற்றி
முடிவுகளில் தான்!

ஆனால் முயற்சிகள் இல்லையென்றால்
தொடக்கங்கள் ஏது ?

தொடக்கங்கள்
இல்லையென்றால்  முடிவுகள் ஏது ?

எழுந்திடு

இரவு முடிந்தது

பொழுது விடிந்தது

மற்றும் ஒரு தொடக்கம்

இன்னும் ஒரு வாய்ப்பு

வேண்டாம் தொய்வு

எழுந்திடு

உன் நல்லெண்ணங்கள் செயலாகட்டும்

இவ்வுலகம் உயர உரமாகட்டும்