நிலவின் சாந்தியா ?

சூரியனை முகம் கொடுத்துப்
பார்க்காதது ஏனோ ?
வெண்ணிலவின் கட்சிக்கு
மாறியதால் தானோ ?

நீ சூரியகாந்தியா ?
அல்லது
நிலவின் சாந்தியா ?

எடிசன் பல்பு

சூரியன் ஒரு எடிசன் பல்பு ஆக வேண்டும்

அதன் சூடு ஏறும்போதுஒரு சுவிட்ச்சைத் தட்டி நான் அதை அணைக்க வேண்டும்

உயர்தரம்

Photo : Unknown Photographer

முன்னே பூப்பூத்துக் குலுங்குகிறது
பின்னே சக்தி கொண்ட செங்கதிரோன்
சுற்றி பசுமை
நடுவே முற்றும் துறந்து நிற்கிறது மரம்
இவ்வாறு இருப்பது அல்லவா உயர்தரம்

உதிர்ந்த என் இதயம்

Photo : Unknown Photographer

நான் இமயம் தொட்டு விட்டேன்
இருந்தும் உன்னில் இருந்து உதிர்ந்த
என் இதயம் இன்னும் அங்கேயே
அழுதுக்கொண்டிருக்கிறது