
மழை அதை நிறுத்தாது குடைஆனால் அதை வைத்துத் தொடருமே மழையில் என் நடை
என்னைவிடப் பெரியது என் பிரச்சனைகள்அதைத் தீர்க்க முடியாது உன்னால்ஆனால் நீ என்னுடன் இருந்தால் போதும்எதையும் எதிர்கொள்ள முடியும் என்னால்
மழை அதை நிறுத்தாது குடைஆனால் அதை வைத்துத் தொடருமே மழையில் என் நடை
என்னைவிடப் பெரியது என் பிரச்சனைகள்அதைத் தீர்க்க முடியாது உன்னால்ஆனால் நீ என்னுடன் இருந்தால் போதும்எதையும் எதிர்கொள்ள முடியும் என்னால்
Edward De Bono the inventor of Lateral thinking once said, the problem of the world is not climate change but inadequate thinking. Yes, good thinking equips yes to handle the challenges better.
This Vedio shows how Singapore is thinking forty years ahead of time to make its human spaces more sustainable and manageable so that it remains in the top of most liveable cites list in the world.
A lot of futuristic ideas to see where the world is heading towards – to list some
Thanks.
புரியவில்லை அருகில்
இருப்பவரின் வலி
அவர் பார்வையோ மற்றொருவர்
வரும் அந்த வழி
சில சமயம்
சும்மா நான் அமர்ந்து
வெளியே நடப்பதையெல்லாம்
கூர்ந்து கவனிப்பேன்
உள்ளே அதைப் பற்றி
வெகுநேரம் சிந்திப்பேன்
பல சமயம் அது
என் வாழ்வில் செம்மையாக
நான் நடக்க உதவிடுதே
என் வெற்றிக்குக் கைகொடுக்க
இசைந்திடுதே
நம்மை
வாழ்க்கை இருபுறமும் நெருக்கலாம்
வளரவிடாமல் தடுக்கலாம்
வழியே கொடுக்காமல் இருக்கலாம்
முழுமையாக வெறுக்கலாம்
ஆனால்
அதை நாம் அனுமதித்தால் தான் நமக்கு வலி
நமக்கு நாம் தான் கைக்கொடுக்க வேண்டும்
நமக்குள் இருந்துதான் வர வேண்டும் மேல் செல்வதற்கான வழி
நம் மதியால் தான் வெல்ல வேண்டும் நம் விதி
முயன்று எழ வேண்டும்
உயர்ந்து வர வேண்டும்
நம்மைப் பார்த்துப் பலர் எழுச்சி பெற வேண்டும்
இறை-இரை
இறை தேடி
இமயம் சென்றேன்
அங்கு இரை தேடும்
பறவைகள் கண்டேன்
இமயத்தின் உயரம்
அதற்கு ஒரு பொருட்டே அல்ல
எல்லை தொல்லை
அதுவும் அதற்கு இல்லை
இறைவனைத் தேட
அதன் சிறகை
இரவல் கேட்டேன்
உயரப் பறந்தும்
இவ்வுலகைப் பார்த்தும்
இறை இன்னும் எனக்கே
தென்படவில்லை
நான் முதலில் கண்டு
பிறகு உனக்கு
என் சிறகைத் தருவேன்
எனக் கூறி பறந்து விட்டது
பறவைக்கூட்டம்
மறைந்துவிட்டது
அன்பைக் கட்டி அணைத்து வாய்விட்டுச் சிரி
உலகம் உன்னை அணைத்துசொல்லும் – நீ தான் சரி
பல மாற்றங்களுக்கு சாட்சியாய் மாறாமல் நீ
உறுதியாய் இறுதிஇல்லாமல் நீ
உன் மேலே நான் அமர்ந்து
இவ்வுலகைக் காண வேண்டும்
உன்னிடம் நான் கேட்டுப் படித்த வரலாற்று உண்மைகளை
அது நிகழ்ந்த வாரே அறிய வேண்டும்
வள்ளுவன் எங்கிருந்தான் ?செந்தமிழை எங்குக் கற்றான்?இதை மட்டுமாவது நீ சொல்லி விட்டால்
உன்னைப் பற்றி ஒரு குறள் எழுதி
ஊர் கேட்கக் குரல் எழுப்புவேன்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்