அவர்களின் அறிவுரை

அங்குத் தென்னை மரம் ஆடும்
குளிர்ந்த காற்று வீசும்
மாடு சாணம் போடும்
அது வறட்டியாக மாறும்

சேவல் கூவி எழுப்பும்
கோழி முட்டை இடும்
அரிசி பானையில் பொங்கும்
அமைதி நிரம்பி வழியும்
உழைத்த உடம்பு கயிற்றுக்கட்டிலில் இளைப்பாறும்

அவர்களை நகரத்துக்கு வாருங்கள் என்றழைத்தால்
வேண்டாம் அது நரகம் என்பார்கள்

வாழ்வது ஒரு முறை
இயற்கையோடு இருக்கட்டும் அது இறுதி வரை
என்பது அவர்களின் அறிவுரை