வடை

உன் குரல் அழகு
பாடு என்று நரி கேட்கும்
பாட்டி சுட்ட வடை என்றால்
பாடி விடுவேன்

அவள் சுட்ட வடையாச்சே
கடவுளே வந்து பாடடும்படி கேட்டாலும்
வடை உண்ட பிறகுதான்
விடை தருவேன்

பனி

எங்கும் பனி
பூமிக்கு வெள்ளைத் துணி
இதன் அழகே தனி
குளிர்காலம் இனி
மெல்ல நகரும் மணி

இதுவும் சில காலமே
ஆதவன் தொடங்குவான் அவன் பணி
நீராகுமே பனி
இதற்கெல்லாம் சாட்சியாய் நீ !

அவள் வரும் நேரம்

அவள் வரும் நேரம்
அதற்காகத்தான் எனக்குக் கடிகாரம்

அவள் வரும் நேரம்
அவள் பார்வை பட்டால் போதும்
நீங்கிவிடும் என் பாரம்

அவள் வரும் நேரம்
அந்த நொடிகள் என் வாழ்வின் சாரம்

அவள் வரும் நேரம்
எனக்கு மார்கழி காலம்

அவள் வரும் நேரம்
என் மனதுக்குள்ளே விழாக்கோலம்

அவள் வரும் நேரம்
தொலைந்து விடுகிறது என் வீரம்
என்னை ஆட்கொள்கிறது மௌனம்
என்வசம் ஆக்க முடியவில்லை அவள் கவனம்

இவ்வாறே கடந்து செல்கிறாள் தினம் தினம்

எல்லாம் சில காலம்
இவர் மட்டும் இதற்கு விதிவிலக்கு

எதுவும் கடந்து போகும்
இவளும் கடந்து போவாள்
ஆனால் திரும்பி வருவாள்

நிலவு

பகல் ஆனது செலவு
வானத்து நிலவு வரவு
அதுதான் எத்தனை அழகு

அனைவருக்கும் சமம் நிலவு
அதுதானே அதன் இயல்பு
எனக்கு வேண்டும் சிறகு
நிலவைத் தொடுவது என் கனவு

வடை சுடும் பாட்டி எனக்கு என்ன உறவு ?
பேச வேண்டும் அவளிடம் பெரிதளவு
வடையைச் சாப்பிட வேண்டும் சிறிதளவு
கேட்க வேண்டும் அவளிடம்
ஆளில்லா இடத்தில் ஏன் அந்தத் துறவு ?

அமைதியின் முழு உருவம் நிலவு
அதனாலேயே என் உள்ளம் களவு
அத்துடனான  தொடர்பு 
எனக்கு ஊக்கமளிக்கும் உயர்வு
வேண்டும் எனக்குச் சிறகு
நிலவைத் தொடுவது என் கனவு

ஊக்கம்

உன் ஊக்கம் மனதுக்குச் சக்தி தரும் உணவு

உன் உழைப்பு அது வெற்றிக்கான கடவு

அதன் விளைவு

நீங்குமே மனச்சோர்வு

தடைகள் அடையுமே பின்னடைவு

கவலைகள் சென்றிடுமே தொலைவு

திறந்திடுமே கதவு

ஒளிர்ந்திடுமே நம்பிக்கை நிலவு

மெய்ப்படுமே உன் கனவு

வாழ்க்கை ஒரு தேர்வு

வெற்றி பெற வேண்டும் தன்னறிவு

அத்தகைய வெற்றி 

தருமே மனநிறைவு

நம்மால் முடியும் என்ற உணர்வு

பல இனிமையான நினைவு

பிறகு ஏது உனக்குச் சரிவு

இவ்வுலகமே உனக்கு உறவு

நீ சென்று பிறருக்கு உதவு.

நான் யார் உனக்கு ?

அவள்:
நான் யார் உனக்கு ?

அவன்:
எனக்கு

என் அம்மா போட்ட காபி நீ
தோனி அடித்த சிக்ஸர் நீ
ரஜினி நடித்த பாட்ஷா நீ
தமிழகம் தொட்ட காவேரித் தண்ணீர் நீ
என் துக்கம் மறக்கும் தூக்கம் நீ
வெற்றி பல தரும் செயல்திறன் நீ
என் பைத்தியத்திற்கு வைத்தியம் நீ
இவ்வளவு போதாது அவ்வளவும் நீ

அவள் – 🙆🙆🙆🙆🙆🙆🙆

Thalaivar 169

வந்தபோது நம்மிடம் ஒன்றுமில்லை
ஆகையால் இழப்பதற்கு ஏதுமில்லை
ஜெயிப்பதற்க்கோ எல்லையேயில்லை
இருந்தும் எதுவுமே நிரந்தரமில்லை
இதை ஏற்க மறுப்பதனால் தான் தொல்லை
ஏற்றால் மன அமைதிக்குப் பஞ்சமில்லை

நிஜத்தோடு வாழ மனம் பழகவில்லை
பொய்கள் நிறைய வேண்டும்,
இருந்தும் மனநிறைவில்லை

ஊக்கமிருந்தால் ஆக்கம் குறைவதில்லை
விடாமுயற்சியிருந்தால் தோல்வி நெருங்குவதில்லை
நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஜெயிப்பதற்கோ எல்லையேயில்லை
தோல்வி என்றால் நம் முயற்சி போதவில்லை !

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை வேண்டும் உலகளவு கொஞ்சம்
பலருக்கு அது தானே பஞ்சம்

தன்னம்பிக்கை நிறைந்த நெஞ்சம்
தன் எல்லைக் கோடுகளை விஞ்சும்

தன்னம்பிக்கை நிறைந்த நெஞ்சம்
தைரியம் அங்கே தஞ்சம்
தொல்லைகள் வர அஞ்சும்
தடைகள் விடைபெற கெஞ்சும்

தன்னம்பிக்கை நிறைந்த நெஞ்சம்
வெற்றிகள் வந்தமரும் மஞ்சம்
அங்கு நம்பிக்கைகள் நிறைய மிஞ்சும்

தம்மில் நம்பிக்கை வைத்தார்
இப்புவியில் பிறருக்கு நம்பிக்கை கொடுத்தார்