நாளை நாளை

நாளை நாளை
என்று தான் கூறுவார்
இன்றின் அருமை தெரியாதார்

நாளை விடிந்து இன்றாகிவிடும்
மீண்டும் நாளை தள்ளி ஓடிவிடும்

நாளை என்பது எட்டாக்கனி
இன்று என்பது வெல்லும் அணி

இன்றை வென்றால்
நாளை நமதே
எந்த நாளும் நமதே

Failure isn’t the end

Failure isn’t the end,
Success isn’t easily penned.

Many strive, few achieve,
Yet failure’s teachings, we believe.

Past victories offer a guide,
But they don’t guarantee the ride
To future triumphs unknown.

Likewise, past mistakes don’t bind
The future that’s yet to find.

Don’t let errors from before
Hinder progress, strive for more.

Persistence is the vital thread,
To weave the  victory ahead.

So, what does persistence mean?

Persistence is the relentless chase,
Until success shows its face.

தோல்வி முடிவல்ல
வெற்றி எளிதல்ல

சில முயற்சிகளுக்கு வெற்றி
பலவற்றுக்கு தோல்வி

முயற்சி தொற்றால் பயிற்சி
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி

கடந்த கால வெற்றிகள்
இனி வரும் வெற்றிக்ளுக்கு
உத்திரவாதம் தருவதில்லை

கடந்த கால தோல்விகள்
எதிர்கால வெற்றிகளை
தீர்மானிப்பதும் இல்லை

விடாமுயற்சி மட்டும் தான்
வெற்றி தரும்

விடாமுயற்சி அது என்ன ?
வெற்றி பெறும் வரை
முயற்சிப்பது தான்.

புத்தகமே

புத்தகமே

என் அலையும் மனதுக்கு
நீ சரணாலயம்.

என் தேடலுக்கான வரைபடம்
நீ இவ்வுலகை எனக்கு காட்டும்
கண்ணாடி
பலர் அனுபவங்களை எனக்குத் தரும் அட்சயபாத்திரம்
என் கனவுகளை விரியச் செய்யும் அற்புதம்
என் எண்ணங்களை மெருகூட்டும்
இயந்திரம்

நீ கையில் இருந்தால் நான் வெகு தூரம் பயணிக்கிறேன்
அனுதினம் புதியதோர் உலகை காண்கிறேன்

என்னைச் செதுக்கி
மெருகேற்றுவது உன் பக்கங்கள்
அதனால் எனக்கு வெற்றி கொடுக்கிறது  பல முத்தங்கள்

நீரின்றி அமையாது உலகு
அதுபோல நீ இன்றி நான் ஏது ?

சனநாயகம் போற்றுபவருக்கு இது சிறந்த நாள்


“மாநிலத்தில் சுயாட்சி
மத்தியில் கூட்டாட்சி”
என்று முழங்கியவர்

சனநாயக உரிமைகளைப்
போற்றிக் காத்தவர்

நெருக்கடிக்கால அத்துமீறல்களைத்
துணிந்து எதிர்த்தவர்

அதை விசாரித்து தொகுத்த
சா கமிஷன் அறிக்கையை மீட்டு
நூலாகக் கொடுத்தவர்

புத்தகங்களுக்கிடையே வாழ்ந்தவர்
பல புத்தகங்களை படைத்தவர்

அண்ணாவின் தம்பி
நாவலரின் இளையவர்
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அன்புக்குரியவர்
இந்திரா போற்றிய எதிர்க்கட்சித் தலைவர்

திமுகவில் தொடங்கி
ஜனதாவில் இணைந்து
பிறகு ஜனதா தளம் என்றிருந்தது
அவர் அரசியல் பயணம்

திருக்கண்ணபுரத்தில் பிறந்து
திமுகவில் வளர்ந்து
டெல்லியில் மலர்ந்து
வேலூரில் நிகழ்ந்தது அவர் மரணம்

இன்று அவர் பிறந்த நாள்
சனநாயகம் போற்றுபவருக்கு இது சிறந்த நாள்

Silence, Silence.

ஐந்தாண்டுகளுக்கு மேல் நடந்த அந்தக் கொலை வழக்கில் , நீதிபதி அன்று மதியம் இறுதித் தீர்ப்பை வழங்குவதாகக் கூறிவிட்டு தன் இருக்கையை விட்டு எழுந்தார்.

கொலைப்பழி சுமத்தப்பட்ட ரகு ஒரு முக்கிய அரசியல்  பிரமுகரின் மகன். அதனால் அந்த நீதிபதிக்குப் பல வகைகளில் பலர் அழுத்தம் கொடுத்தனர்.

நீதிபதி பலத்த யோசனைகளுடன் என்ன சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் தன் மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தார்.

இடைவெளிக்குப் பிறகு நீதிபதி வந்து அவர் இருக்கையில் மீண்டும் அமர்ந்த போது அந்த நீதிமன்றத்தில் ஒரு மயான அமைதி. நீதிபதி தன் தீர்ப்பை வழங்கத் தயாரானார்

” இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நன்கு ஆராய்ந்ததில் ரகு தான் ரேகாவை கொன்றார் என்பதை அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால் அவர் நிரபராதி என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆகையால் அவரை உடனே விடுவிக்கும்படி காவல்துறையினருக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது.” என்று சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ரகு தன் மனதுக்குள் சந்தோசப்பட்டாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அங்க இருந்த தன் அப்பாவை ஒரு முறை பார்த்தான். பெருமூச்சு விட்ட வாரே அவரும் அவனைப் பார்த்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞருக்கும்,  காவல்துறையினருக்கும் இந்த தீர்ப்பு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

ரகு தான் அந்தக் கொலையை செய்தான் என்ற போதிலும் அதை நிரூபிக்கத் தவறியதில் அவர்களுக்கு வருத்தம்.

அச்சமயத்தில் தான் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அந்த சம்பவம் நடந்தது.

நீதிபதியை நோக்கி ஒரு பெண் நடந்து வந்து அவருக்கு முன் நின்று அங்குள்ளவர்கள் அனைவரும் கேட்கும் வகையில் ” ரகு தான் கொலைகாரன் அவன் தான் என்னைக் கொன்றான் ” என்றாள்.

“நான்தான் அன்று கொலை செய்யப்பட்ட ரேகா ” என்று கூறிவாறே திரும்பி  அங்கிருந்த அனைவருக்கும் தன் முகத்தைக் காட்டினாள்.

அனைவருக்கும் ஆச்சரியம் இறந்தவள் எப்படி உயிர் பெற்று மீண்டும் வந்தாள் என்று. ரகுவுக்கோ குழப்பத்தில் தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

ரேகா கொலை செய்யப்பட்ட பின் அவளின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு , பிறகு அவளின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவள் உடல் தீயூட்டி எரிக்கப்பட்டது, அங்குள்ள அனைவருக்கும் எந்த சந்தேகமும் இன்றி இது நன்கு தெரிந்த விஷயமே.

அப்படி இருக்க எப்படி இப்படி ?

நீதிபதி அரசு வழக்கறிஞரைப் பார்க்க, வழக்கறிஞர் காவல்துறை அதிகாரிகளைப் பார்க்க அங்கு ஒரே குழப்பம்.

நீதிபதி சற்று யோசித்து பிறகு சைலன்ஸ் சைலன்ஸ் என்று தன் மேஜையைத் தட்டினார்.

அங்கிருந்து அனைவரும் நீதிபதி அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க மிக ஆர்வத்துடன் அமைதியானார்கள்.

நீதிபதி பேச ஆரம்பித்தார் ” சற்று நேரத்துக்கு முன்பு நான் சொல்லிய தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படும். ரகு ஒரு நிரபராதி என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் கொலை செய்ததாக கருதப்படும் ரேகா திடீரென்று இந்த நீதிமன்றத்திற்கு முன் தோன்றி தன்னை ரகு தான் கொலை செய்தார் என்று கூறியதால் எழுந்துள்ள குழப்பத்திற்கு விடை காண வேண்டும்.

மேலும் இறந்ததாகச் சொல்லப்படும் ஒருவர் எப்படி மீண்டும் உயிர் பெற்று வந்தார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது

ஆகையால் இந்த நீதிமன்றம் இந்த குழப்பத்திற்குக் காரணமான இக்கதையின் ஆசிரியரைத் தகுந்த விளக்கத்துடன் வருகிற மே இரண்டாம் தேதி காலை பத்தரை மணிக்கு இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிடுகிறது.” என்று கூறி தனக்கு முன் நின்ற ரேகாவை அவர் பார்த்த போது திடீரென்று அவள் மாயமாக மறைந்து விட்டாள்.

மே இரண்டாம் தேதி தான , நமக்கு நிறைய நேரம்  இருக்கிறது. நிதானமாகச் சிந்தித்து மெதுவாக நல்லதொரு விளக்கத்தை பிறகு எழுதலாம் என்று தனகுதானே கூறிக்கொண்டு பேனாவை மூடி வைத்துவிட்டு , காபி குடிக்கலாம் என்று அருகே உள்ள டீக்கடையை நோக்கி நடந்தார் இக்கதையின் ஆசிரியர்.



வேற்று கிரகவாசி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கதை எழுத அந்த இருள் சூழ்ந்த இரவில் மேஜைக்கு அருகே இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்தான்.

சற்று தூரத்தில் ஏதோ நகர்வது போல் இருந்தது. அங்கு அவனைத் தவிர வேறு யாரும் இல்லாததால் பயம் அவனை பற்ற ஆரம்பித்தது.

என்ன செய்வது என்று அறியாது குழம்பினான். தன் குலதெய்வத்தை மனதில் நினைத்தவாறு அந்த இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவ்விடத்தை நெருங்க நெருங்க ஏதோ ஒன்று அங்கு இருப்பதை உணர்ந்தான்.

தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ” யார் அங்கே ?” என்று இரு முறை கத்தினான். பதில் ஏதுமில்லை

தன் கையில் இருந்த கைபேசியில் லைட்டை ஆன் செய்தவாறு மேலும் நடந்தான். அந்த வெளிச்சத்தில் மங்கலாக ஒரு உருவம் அவன் கண்ணில் பட்டது. அது சற்று வித்தியாசமாக இருந்தது. அருகே சென்றவுடன் அது ஒரு வேற்று கிரகவாசி என்பது அவனுக்கு புரிந்தது.
அவனில் இருந்த பயம் முற்றுமாக நீங்கி இப்பொழுது ஆர்வம் அவனைப் பற்றிக் கொண்டது. அதனுடன் பேச ஆசைப்பட்டான்.

எந்த மொழியில் பேசுவது என்று அவனுக்கு குழப்பம்

நீ யார் ?

ஹு ஆர் யூ ?

ஆப் கோன் ஹை ?

என்று அவனுக்குத் தெரிந்த மொழிகளில் எல்லாம் அதனிடம் கேள்வியை எழுப்பினான்

சற்று நேரத்துக்குப் பிறகு தமிழிலே அதனிடமிருந்து பதில் வந்தது

“நீ யார் என்று உனக்குத் தெரியும் போது, நான் யார் என்பது உனக்கு புரியும் “

என்று  கூறிவிட்டு  அந்த வினாடியே அங்கிருந்து அது மறைந்தது.

“அவங்களும் ( வேற்று கிரகவாசிகள்) நம்ம ஊரு அரசியல்வாதிகள் போல தான் இருக்காங்க, ஏதாவது கேட்டா நேரிடையான பதில் சொல்றதில்ல” என்று சொல்லிக்கொண்டே மேஜை நோக்கி நகர்ந்து நாற்காலில் அமர்ந்தான்.

கருப்பு இரவு

Photo by UMUT DAĞLI

கருப்பு இரவு
வெள்ளை நிலா
புத்தர் கண்ட அமைதி
ஏதோ சொல்கிறது தவளை
விடிந்து விடும் என்ற நம்பிக்கையில்
பலர் உறங்குகிறார்கள்
கவலைகளை மறந்து

Past is not equal to future !

அந்த அரசியல் கட்சி தாராளமாகத் தான் பணம் கொடுத்தாங்கன்னு  சொல்லவேண்டும். அவனுக்கு 2000 ரூபாய் கிடைத்தது. அதை வச்சு ஒரு வாரம்   அவன் வாழ்க்கை ஓடியது.

வாங்கின காசுக்கு உண்மையா அந்த அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போட்ட கையோடு ஊருக்கு வெளிப்புறமாக உள்ள அந்த தண்டவாளத்தின் பக்கம் போனான். அவன் திட்டமிட்டபடி ரயில் வந்தவுடன் அவன் தலையைக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.

ரயில் வருகைக்காகப் பொறுமை இல்லாமல் காத்திருந்தான்.

” பிறந்தது முதல் நிறைய அவமானங்களை, தோல்விகளை  பார்த்தாச்சு, எல்லாம் போதும் இன்றுடன் எல்லாம் முடியப் போகிறது” என்று தனகுதானே சொல்லிக் கொண்டான்.

தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. இவனும் தண்டவாளத்தில் தன் தலையை வைத்து தன் கண்களை இறுக்க முடி கொண்டு தயாரானான்.
ரயிலும் நெருங்கி வந்து கொண்டிருந்தது………

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு வெற்றியாளனாய் அவன் அந்த சம்பவத்தைப் பற்றி கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது

அன்று அந்த ரயில் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தோன்றிய ஒரு பெரியவர் தன்னைத் தட்டி எழுப்பிக் கூறியதை அப்படியே மாணவர்களிடம் பகிர்ந்தான்

” தம்பி எப்போதுமே பிரச்சனைகளுக்கான தீர்வு தற்கொலை அல்ல. உன் கடந்த காலம், நீ கடந்து வந்த பாதை ஏதுவாகவும், எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம்.

என் அனுபவத்தில் ஒன்று மட்டும் சொல்கிறேன் கேட்டுக் கொள் உன் கடந்த காலம் உன் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதில்லை. அப்படித் தீர்மானிக்கும் சக்தியையும் அதற்கு நாம் கொடுக்கக் கூடாது.

இப்பொழுது, இந்த நொடிப் பொழுதிலிருந்து நீ எண்ணும் எண்ணங்களும், நீ செய்யும் செயல்களும் தான் உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அப்படிச் செய்து பார் “

Past is not equal to future”

என்று கூறி அவன் தன் பேச்சை முடிக்க, அன்று அந்தக் கூட்டத்தில் தற்கொலை செய்யும் முடிவிலிருந்த ஒரு மாணவன் அந்த  முடிவையே மாற்றிக்கொண்டான்.

Yatra 2 – Film Review

*Yatra 2*

“Yatra 2” is a sequel to the YSR biopic, focusing on YS Jagan’s journey to becoming the Chief Minister of Andhra Pradesh after YSR’s tragic death.

The film portrays Jagan’s political battles against figures like Sonia Gandhi and Chandrababu Naidu, who conspire to halt his political ascent.

With Mammootty portraying YSR and Jiiva as YS Jagan, the film enriches the father-son dynamics in this Telugu political drama.

If you like politics, this film is worth watching.