உன் இசை என்றும் மறையாது.

எத்திசையிலும்  உன் இசை

பலர் செவிகளுக்கு விருந்தாய்

பலர் அமைதிக்குப்

 புத்தனாய்

பலர் பயணங்களில் துணையாய்

பலர் தனிமைக்கு இனிமை தருவதாய்

பலருக்கு உற்சாகமூட்டும் சக்தியாய்

பலருக்கு ஆறுதல் தரும் மருந்தாய்

பலரை உறங்க வைக்கும் தாலாட்டாய்

இசைக்கிறது 

இதன் விசை என்றும் குறையாது

உன் இசை என்றும் மறையாது.