தமிழ்

தரை தொட்டது விமானம்
சென்னை மண்ணில்
இறங்கி நடந்தேன்
விமான நிலையத்திற்குள்

வழிகாட்டிப் பலகைகள்
சில தென்பட்டது
அதில் என் கண் பட்டது

நற் தமிழில் சில சொற்கள்

உடைமை வேண்டுகை ( Baggage Claim)
மாறுகை ( Transfer)

அதைப் படித்தபோது
என் உதட்டில் புன்னகை
மனதில் மகிழ்ச்சி அலை

தமிழ் தழைக்கும்
அது இனிக்கும்
என்றும் சிறக்கும்
என்ற நம்பிக்கை

Resignation

Though many said do not
Within me I fought
And after a long thought
It gave the clarity I sought

The lessons my experience taught
Questioned me – Why not ?
Take a break, step out
And Pursue other interests so far unthought

My mind said do not
In fear you get caught
To realise the dreams you got

In SGRE SE IN there are many
great talents to spot
And they will stop not
Till the lost glory is again brought
To put SGRE in the top slot

Change is the only constant
Is it not ?
So I put a dot
This is what , i keep it short

Your love and support
To me it means a lot
You will all always be in my heart
Till my breath rise not
And I become a naught

என் நிழல்

சிலசமயம் பெரிதாகச்
சிலசமயம் சிறிதாகப்
பலசமயம் எனக்கு முன்னே
பலசமயம் எனக்குப் பின்னே

ஒளி வந்தால்
உருவெடுக்கும்
இருள் வந்தால்
அது மறையும்

இருளில் ஏன் ?
உன் அருள் இல்லை என்று
என் நிழலில் நான் நின்று
அதில் என்னையே நான் கண்டு
கேட்டுவிட்டேன் இன்று

பதில் தெரியாமல் அது நிற்க
அதைப் படம் பிடித்தேன்
நீங்கள் பார்க்க

விட்டுவிடாதே விடாமுயற்சி

வாழ்க்கை சுழற்சி
அதில் பலவித சூழ்ச்சி
பலரது இகழ்ச்சி
உண்டாக்கும் தளர்ச்சி
திண்டாடும் நம் முயற்சி
ஒளிந்து கொள்ளும் மகிழ்ச்சி

இருந்தும்
அதை ஆட்கொள்ள ஒரு பயிற்சி
அது விடாமுயற்சி
ஆக்குவோம் அதை அன்றாட நிகழ்ச்சி
அதன் தொடர்ச்சி
தருமே நமக்கு ஊக்கம் அளிக்கும் கிளர்ச்சி
நமக்குள் ஒரு புரட்சி
பிறகு வெற்றியின் மீட்சி
நம்மைத் தேடி வரும் புகழ்ச்சி
விட்டுவிடாதே விடாமுயற்சி

இதற்குப்
பல வெற்றியாளர்களின்
வாழ்க்கை காட்சி
அதுவே சாட்சி



குறை – நிறை

உன் குறைகளைப்
பற்றிப் பேசுவேன்
உன்னிடம் மட்டும்

உன் நிறைகளைப் பற்றி
நிறையப் பேசுவேன்
அது பிறரையும் எட்டும்

மகளிர் தின வாழ்த்துக்கள்

இவ்வையகம் தாங்கும்
தூண் தான் மகளிர்

நீயும் நானும்
அவர்கள் இல்லையேல் வாரா

அவர்களைப்போல அன்பு
வேறு யாரும் தாரா

அவர்கள் ஆசியின்றி
அணுவும் அசையா

அனுதினம்
மகளிர் தினம்தான்
யாவரும் கேளிர்

தோல்வி

உன் தோல்வி என்ன
முடிவான முடிவுவா ?
இல்லை
மற்றொரு தொடக்கத்திற்கான விடிவு

உன் தோல்வி என்ன
உன் முயற்சிக்கு இகழ்ச்சியா ?
இல்லை
உன் முன்னேற்றத்திற்கான பயிற்சி

உன் தோல்வி என்ன
உன் இயலாமையாலா ?
இல்லை
உன் முயலாமையால்

உன் தோல்வி என்ன
உனது வீழ்ச்சியா ?
இல்லை
அடுத்த முயற்சிக்கான எழுச்சி

உன் தோல்வி என்ன
குழப்பங்களின் குழுமமா ?
இல்லை
தெளிவு தரும் முத்தம்

இவ்வுலகில் உனக்கு
மட்டும்தான் தோல்வியா ?
இல்லையே
அது உன்னுடன்
பலர் இருக்கும் கட்சியே

உன் தோல்வி என்ன
முடிவான முடிவா ?
இல்லை
அடுத்து வரும் வெற்றியின் கதவு.