
வெண் கதிரவன் உதிக்க
புது நம்பிக்கை பிறக்க
தொடருது வாழ்க்கை பயணம்
தினம் தினம் புது நம்பிக்கை
நம்முள் உதிக்க வேண்டும்
அது நம்மேல் நமக்காக
இருக்க வேண்டும்
எது வந்த போதும் அது
மாறாமல் இருந்தால்
நாம் இவ்வுலகிற்க்கே
ஒளி தர முடியும்
நாம் மறைந்தால்
இவ்வுலகமே ஒளி தேட கூடும்