அடல் சுரங்கப்பாதை( Atal Tunnel )

அடல் சுரங்கப்பாதை
( Atal Tunnel )

இதுதான் தற்போது உலகிலேயே பத்தாயிரம் அடி உயரத்தில் உள்ள நீளமான ஒற்றைக் குழாய்  நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். (Single tube tunnel)

இந்த சுரங்கப் பாதைக்கு நம் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவாக அடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் நீளம் 9.02 கிலோமீட்டர். இது இமாச்சலப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை மூன்றில் (NH 3), இமயமலையின் கிழக்குப் பகுதியான பிர் பஞ்சால் ( Pir Panjal ) மலைத்தொடரில் ரோஹ்தாங் ( Rohtang Pass ) கணவாயின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

2000 ஆம் ஜூன் மாதத்தில்  அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் , 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி அன்று எல்லா வேலைகளும் முடிவடைந்த நிலையில் திறக்கப்பட்டது. இந்த முழு திட்டத்திற்கான செலவு சுமார் ₹ 3200 கோடி . இது நமது எல்லை சாலைகள் அமைப்பால் ( Border Road Organisation) கட்டி முடிக்கப்பட்டது.

இதன் கட்டுமானத்தின் போது எதிர்கொண்ட இரு பெரும் சவால்கள்

1. சுரங்கப்பாதையைத்   தோண்டும்போது பாறை மட்டும் மண் கிட்டத்தட்ட 8 லட்சம் m3 அளவுக்கு மேல் அப்புறப்படுத்தி வேறு இடத்துக்குக்
கொண்டு சென்றது.

2. மேலும் சுரங்கப்பாதையை தோண்டும் சமயத்தில்,  நீர் உட்புகுதல் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் அளவில் இருந்தது. அந்நீரை தொடர்ந்து வெளியேற்றுதலும் ஒரு
பெரும் சவாலாக அமைந்தது.

இந்த சுரங்கப்பாதையின் சிறப்பு லே ( Leh) செல்லும் வழியில் மணாலிக்கும் ( Manali ) கீலாங்கிற்கும் ( Keylong )  இடையிலான பயண நேரத்தையும் ஒட்டுமொத்த தூரத்தையும் குறைப்பதுதான். இந்த சுரங்க வழிப் பயணம் நேரத்தை மூன்று முதல் நான்கு மணி நேரம் குறைப்பதோடு பனிச்சரிவு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பாதிக்கக்கூடிய தளங்களையும் தவிர்க்கிறது.

இது நிச்சயம் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு திட்டம் மற்றும் நம் தேசத்தின் பெருமைச் சின்னம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s