
மாதம் மும்மாரி மழை வேண்டும்
அருவிகள் வற்றாது ஓட வேண்டும்
ஆறுகள், குளம், குட்டைகள், ஏரிகள் கண்மாய்கள் நிரம்ப வேண்டும்
மழைநீர் கடலுக்கும் செல்ல வேண்டும்
அனைவருக்கும் நீர் வேண்டும்
சந்தையில் நீர் விற்க்கும் அவல நிலை மறைய வேண்டும்
நிலத்தடி நீர் உயர நிலம் செழிக்க வேண்டும்
நிலம் செழித்து நெல்லுயர வேண்டும்
நெல்லுயர்ந்து பஞ்சம் பிணி நீங்க வேண்டும்
நீரின்றி அமையாது உலகு
இதை நாம் அறிந்தால்
பிரச்சனை ஏது பிறகு ?