
அன்புத்தங்கை புதுமனை புக
அங்குச் சொந்த பந்தங்கள் சூழ
பாசம், அன்பு, நேசம் நிரம்ப
பேரானந்தம் அங்கே இருக்க விரும்ப
ஆட்டம் பாட்டம் கேலிப்பேச்சு
மகிழ்ச்சி பொங்க நேரம் போச்சு
அனைவரின் அன்புப்பேச்சு
செவிக்கு விருந்து
இடையே வயிற்றுப் பசி போக்க அறுசுவை விருந்து
மூன்று தலைமுறைகள் ஒன்று சேர
நாலாம் தலைமுறை இளம்பிடி ஒரு போட்டியை நடத்த
அங்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல
எல்லாம் ஒன்றுகூடி அமர்ந்து போட்டியை ரசிக்க
சமோசா, காபி வந்து சேர்ந்தது
நேரம் மாலை ஆனது
உறவுகள் விடை பெறும் நேரம் வந்தது
பெரியம்மா சுற்றத் திருஷ்டி எல்லாம் கழிந்தது
கூடிய உறவுகள் கலைந்து சென்றது
கூடிக்களித்த சந்தோஷம் மனதில் நின்றது
அந்த நாளை இனிதே வென்றது
உறவுகள் நாம் பெற்ற வரம்
நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் உரம்
நமக்குக் கைகொடுக்கும் பலம்
அதைப் போற்றி காத்திடுவோம் தினம்
தங்கையே நீ வருடம் ஒரு வீடு வாங்கு
அனைவரையும் அழைத்து அந்த மகிழ்ச்சியில் மூழ்கு.