
ஒரு கணம் நின்று விடு
சொல்வதைக் கொஞ்சம் கேட்டு விடு
உறுதியுடன் இருந்து விடு
வென்று விடுவேன் என்று எழுந்து விடு
அனைவரும் ஒன்றென்று கருதி விடு
வேண்டிய சக்தியெல்லாம்
உன்னுள் உண்டென்று நம்பி விடு
அச்சத்தைத் துச்சமென மதித்து விடு
புதிய சரித்திரம் ஒன்றைப் படைக்க எழுந்துவிடு
முனைப்பையும் துடிப்பையும்
பெருக்கி விடு
களைப்பையும் மனச் சலிப்பையும் கலைத்து விடு
உன்னுள்ளே நல்லெண்ணங்களை விதைத்து விடு
உன் மாற்றம்
இவ்வுலகிற்கே புதிய தோற்றம்
என்று நினைத்து விடு
உன் அன்பால் இவ்வுலகையே
அசத்தி விடு
அன்றன்றே முழுவதுமாக
வாழ்ந்து விடு
வெறும் கதை அல்ல உன் வாழ்க்கை
அது ஒரு கீதை.