
தொடங்க தயக்கம்
என்னுள்ளே ஒரு கலக்கம்
மன மயக்கம்
சில பல தடைகள்
நடுநடுவே இடையூறுகள்
பலதடவை முயன்று
வைத்தேன் முதல் அடி
அடுத்தடுத்து இயல்பாகப் பல அடிகள்
என் இலக்கை நோக்கி நகர்த்தியது
திரும்பிப் பார்க்கிறேன்
வியந்து போகிறேன்
பெற்ற அனுபவத்தில் திகைத்து நிற்கிறேன்
வெற்றியின் ரகசியம்
கரைந்து போனது
முதல் அடி
முதல் படி
அதுவே மிக முக்கியம்
முன்னேறிக் கொண்டே இருப்போம்
அது மெதுவாக இருக்கலாம்
அதுவும் முன்னேற்றம் தான்