
சிறுகதை
12.12.2065
அந்த வளைவில் கார் நின்றது. அங்கு ஒரு விதமான அமைதி. பசுமை சூழ்ந்த மலை வனம். அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்அங்கு வேறு யாரும் இல்லை.
மறுபடியும் வாகனத்தில் உள்ளே இருந்தவாறே கேமராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தான் அப்படி எதுவும் அவன் கண்ணில் படவில்லை.
மிகக் கவனமாகத் தன் மூக்கில் பொருத்தியிருந்த கருவியைக் கழட்டி வைத்தான். மெதுவாகக் கார் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கினான். தூய குளிர்காற்று அவனைத் தாக்கியது. தன்னை மறந்து அந்தக் காற்றை ஆனந்தமாகச் சுவாசித்தான்.
சிறிது நேரம் கழித்து தன் கார் ஜன்னல் கண்ணாடியை மீண்டும் உயர்த்திவிட்டு அந்தக் கருவியைத் தன் முக்கில் பொருத்திக் கொண்டு மலையடிவாரத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.
யாருக்கும் தெரியாமல் இந்த இடத்திற்கு மாதம் இருமுறையாவது அவன் வருவதுண்டு ஏனென்றால் இங்கு மட்டும்தான் சுவாசிக்கும் காற்று இலவசம் யாருக்கும் தெரியாது அதைச் செய்வதால்.