
நான் நீரில் நீந்தி
அந்த மலையேறி வந்தாலும்
நீ இன்னும் எட்டாத தூரம் தான்
என் கண்ணை மூடி
கற்பனையில் நான் மிதந்தால் போதும்
மலையைக் குடைந்து
அதனுள்ளே நான் அமர்ந்து
நீரைக் கயிறாக்கி
உன்னைக் கட்டி என்னருகே
இழுத்து விட முடியும்.
நிஜம் கசக்கிறது.
கற்பனைப் பொய் இனிக்கிறது