
தரை இறங்கியது விமானம்
சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்
யாரைப் பார்த்தாலும்
இதே தான் பேச்சு
தேசியக்கொடிக்குக் கீழே நிற்கிறேன்
தேசியக் கொடிக்கு எதிரே நிற்கிறேன்
நிகழ்ந்து போனேன் அவர்களின்
தேச பக்தியைப் பார்த்து
ஓலா வண்டி வந்து அவர்களைப் பிக்கப் செய்யும்வரை