காட்டு வழியே
நடந்து சென்றனர் இருவர்
வெகு தூரம் கடந்த பின்
வெறும் காலில் நடந்ததால்
களைப்புற்று பெரிய மரத்தின்
கீழ் அமர்ந்தனர்
அசதி மிகுதியால் சிறிது நேரம்
படுத்தும் உறங்கினர்
திடீரென சத்தம் கேட்க
இருவரும் கண்முழித்தனர்
சிறிது தூரத்தில் ஒரு புலி
அமைதியாய் உட்கார்ந்து
இவர்களை நோக்க
பயந்தான் ஒருவன்
பதற்றமின்றி தான் சுமந்த வந்த
பையிலிருந்த தன் ஷூவை எடுத்து அணிந்தான் மற்றொருவன்
ஷூவை போட்டால் புலியை
விட வேகமாக ஓடி விட முடியுமா?
என்று கேட்டு
பயத்திலும் நகைத்தான் அவன்
நிச்சயம் முடியாது
ஆனால் உன்னை விட
வேகமாக ஓட முடியும்
அது போதும்
என் உயிர் காக்க
என்றான் இவன்
வியாபாரத்திலும் போட்டி
இப்படித்தானே……