
தினம் தினம் இரவு
தனியே நான் அமர்ந்து
அன்றைய தினம் நான் பெற்ற அனுபவங்களைப் பற்றி
சற்று சிந்திப்பேன்.
ஏனென்றால்
என் வாழ்க்கைக்கான பாடம்
அனுபவங்கள் தருவதில்லை
அதைப் பற்றி நான் சிந்தித்து
பெரும் நுண்ணறிவு
அனைத்தையும் படம்
பிடித்துக் காட்டி விடும்
சரியான பாடத்தையும்
எனக்குத் தந்துவிடும்.