
உச்சி வெயில் நேரம் அது
ஒரு மரத்தடியில் நான் நின்று
என் தோல்விகளை நான் நினைத்து
அடுத்த அடி, அதை எடுத்து வைக்க
நம்பிக்கையின்றி நான் தவித்தபோது
அந்த வழி நடந்து போனாள்
வயது முதிர்ந்த பாட்டி அவள்
கையிலே ஒரு பையுடன்
நிறையவே தன்னம்பிக்கையுடன்
அதை நான் கண்டவுடன்
அறிந்துகொண்டேன்
புரிந்துகொண்டேன்
தேக்கம் அல்ல
இயக்கம் தான்
வாழ்க்கை என்று
நின்ற நான் நடக்கலானேன்
தன்னம்பிக்கை பெற்று தலைநிமிர்ந்தேன்