பல இன்னல்களுக்கிடையே
புது மின்னும் பொலிவுடன்
ஒரு செடி அது மலர் தந்து நின்றது
அதன் மேல் ஒரு அழகுப்
பறவை அது வந்து அமர்ந்தது
ஒரு சத்தம் கேட்டு பறவை அது
பயந்து நடுங்கி பறந்தது
கண்ணில் படாமல் மறைந்தது
செடி மட்டும் அதே பொலிவுடன்
அங்கேயே நின்றது
மேலும் மேலும் வளர்ந்தது
இன்னல்கள் நிறைந்த இவ்வுலகில்
சவால்கள் வந்த சத்தமிடும்
பயந்து ஓடாமல் நாம்
நின்று விட்டால்
சவால்களை எதிர்கொண்டு வென்றுவிட்டால்
நாமும் மின்னுவோம்
மேலும் மேலும் வளர்வோம்