உன்மீது
நான் அமர்ந்து
பல பயணம்
சில பயணம் என்னைச் சோதித்தது
சில பயணம் எனக்குப் பாடம் கற்பித்தது
சில பயணம் வெற்றியை அரவணைத்தது
சில பயணம் தோல்வியிலே முடிந்தது
சில பயணம் புது நம்பிக்கையை எனக்கு அது தந்தது
சில பயணம் மனச்சோர்வை உண்டாக்கியது
சில பயணம் சில சமயம் பாதியிலேயே முடிந்தது
முடிவுகள் உன்னைப் பாதிப்பதில்லை
அது அடுத்த பயணத்தை நான் தொடங்க என்னை ஊக்குவிக்கத் தவறியதில்லை
இதோ
உன்மீது
நான் அமர்ந்து
நம் அடுத்த பயணம்