
ஆப்பிளிடம் ஒரு கேள்வி
உயரத்தில் நீ வளர்ந்து
உயிர்ச்சத்துகள் பல சுமந்து
வெயில் படாமல் நீ இருந்து
ஏழை எளியோர்களிடம் வர மறுத்து
பொதுவுடமைக் கட்சியின்
நிறம் தன்னில்
ஆடை அதை நீ அணிந்ததேனோ ?
பதிலேதும் கூறாமல்
தன் தவற்றைத் தான் உணர்ந்து
அழுது விட்டது ஆப்பிள்.