
பல ஆண்டுகள் கழித்து
உடன் படித்த நண்பனுடன்
படித்த கல்லூரிக்கு சென்றபோது
முதலில் ஆசிரியர்களை தேடவில்லை
தங்கிய விடுதிக்கும் போகவில்லை
படித்த வகுப்பறைக்கும் செல்லவில்லை
வாழ்க்கையை கற்றுக் கொடுத்த
அந்த டீ கடைக்குள் சென்று அமர்ந்து
இருவரும் ஒரே சமயத்தில்
சொன்னது ஒன் பை டூ