கிருமி வந்து உன் அழகைப் பார்த்து
நின்று விடும்.
உன்னழகு அதை எளிதில் வென்றுவிடும்.
வேறெவரும் உன்னருகில் வந்துவிட்டால்
பொறாமை கொண்டு நிச்சயம் அது தாக்கிவிடும்.
கிருமியே உனக்குப் பாதுகாப்பாக இருக்க
முகமூடி எதற்கு?
அதைக் கழட்டி விடு
உன் அழகு முகத்தை ரசிக்க விடு.