
ஒரு பசுவுடன் அவன் காட்டுவழி செல்ல
அவ்வழி வந்த ஒருவன் அது பசுவல்ல புலி என்று சொல்ல
வந்தவன் பித்தன் என்று இவன் நினைத்து தன்னுள் சிரித்து முன் செல்ல
வந்தான் இன்னொருவன் அவ்வழி
அவனும் அது புலி என்று சொல்ல
இவன் ஒரு முறை திரும்பிப் பார்த்து அது பசு தானா? என்று ஊர்ஜிதம் செய்ய
அடுத்தாக வந்த மற்றொருவனும் அது புலி என்று சொல்ல
திரும்பிப் பார்க்க மனமில்லாமல் இவன் சற்று பயம் கொள்ள
கடைசியாக வந்தான் ஒருவன்
அவனும் அது புலிதான் என்று சொல்ல
இவன் தனியே பிடித்தான் ஒரு ஓட்டம்
யாரும் முடியாதபடி அவனை வெல்ல
அவர்கள் சதி வெல்ல
கூடி மகிழ்ந்தனர் அந்த நால்வரும் அப்பசுவை அழைத்துச் செல்ல
படித்தேன் இக்கதையை மெல்ல
சிந்தித்தேன் பல நிமிடங்கள் செல்ல
என்னுள் எழுந்த ஒர் எண்ணம் இங்கு கிழே நான் சொல்ல
படியுங்கள் நீங்களும் மெல்ல
ஊடகங்கள் உண்மையை மறைக்க விலை போகும் சதி
அதனால் ஆனது பசுவை இழுத்தவனை போல் நம் கதி