எருமையில் ஒருவன் வருவான்

வறுமையில் மனம் வாடாதே

செழுமையில் ஆட்டம் போடாதே

அழையா விருந்தாளியாக

எருமையில் ஒருவன் வருவான்

உன் பெருமை சிறுமையெல்லாம்

வெறும் வெறுமை என்றுணர்த்தி

உன்னை அழைத்துச் செல்வான்.

இவர்களின் நிலையும் நிலையாமை கொள்ளுமோ ?

தன் பணி முடிந்து வீடு திரும்பும் கதிரவன்
தன் பொறுப்பேற்க மேலே எழும்பும் சந்திரன்
இவர்கள் தங்கள் அழகை பார்க்க கீழே சமுத்திரன்

அன்றும் இன்றும் என்றும் இவர்கள் நிலையாய் நிற்க
வந்து போகும் மானுடம் இவர்களைத் தவிர அனைத்தையும் விற்க

இவர்களின் நிலையும் நிலையாமை கொள்ளுமோ ?

சாலை

இருபுறமும் நெடு உயர மரங்கள்
பல வண்ணத்தில் அதன் இலைகள்
நடுவே ஒரு சாலை

தென்றல் வந்து தழுவ
சில இலைகள் உதிர்ந்து நழுவ
அது சாலைக்குச் சேலையானது
அதனை அழகை ரசிப்பது என் வேலையானது

சாலை முடிவில் ஒரு திருப்பம்
அவ்வழி தினம் நடப்பது என் விருப்பம்

கவித கவித

நதிகள் நீர் நிரம்பி ஓடட்டும்
எங்கும் பூக்கள் பூக்கட்டும்
மின்சாரம் சூரிய ஒளியில்
இருந்து மட்டும் பாயட்டும்
வீடாளும்பெண்கள் நாடாளட்டும்
பருவநிலை மாற்றம் ஏமாறட்டும்

பூக்கள்

ஓரிடத்தில்
பல நிறத்தில்
பூக்கள்

சொல்லும் செய்தி
வாடும் வரை
முழுமையாக இருந்து விடு
பார்ப்பவருக்குப் புத்துணர்ச்சி தந்துவிடு