
விலை என்ன ? கூறு
வலை ஒன்று வேண்டும்
மனம் என்னும் கடலில்
நீந்தும் கவலைகளைப் பிடிக்க
கவலைகளைப் பிடித்து
தீயூட்டி எரித்து
மண் தோண்டி புதைத்து
வேதனைகளை மறந்து
ஊக்கம் பெற்று எழுந்து
மகிழ்ச்சி அதை
அன்றாட நிகிழ்ச்சியாக்கி
எழுச்சி பெறுவேன்
வளர்ச்சி அடைவேன்
சிகரம் தொடுவேன்.