பாரதிதாசன்

கனகசுப்புரத்தினம்
பாரதியைப் படித்து
அவனை மனதில் பதித்து
பாரதிதாசன் ஆனான்

பெரியாரை மதித்து
கடவுளை மறுத்து
மதத்தைத் தவிர்த்து
சாதியை வெறுத்து
திராவிட கவிஞன் ஆனான்

அறிஞர் அண்ணா கண்ட
புரட்சிக் கவிஞர் இவர்
இவருக்கு நிகர் எவர் ?

தமிழ் இருக்கும் வரை
இவர் இருப்பார்
தமிழர்களின் மனங்களில்
வேரூன்றி நிற்பார்

தமிழ் எப்படி அழியும் ?
அதுதான் அமுதாயிற்றே
நம் உயிர் ஆயிற்றே
நம் வாழ்வும் வளமும் அது ஆயிற்றே
பாவேந்தர் கூறியபடி
முழுங்கு சங்கே
இவ்வுலகம் கேட்கட்டும்
தமிழன் எழுச்சி கொள்ளட்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s