
இரவை முடித்து
என் துயிலைக் களைத்து
கனவைத் தகர்த்து
நிஜத்தைக் காட்ட
உதிக்கிறான் ஆதவன்
அவன் அனுதினம் காலை உதித்து
இருளை உதைத்து
வெளிச்சம் காட்ட
நன்கு புரிந்தது எனக்கு
வாழ்வில் இருளை நீக்க
சொல்லல்ல செயல்தான் அவசியம்
அதிலும் சொல்லிய வண்ணம் செயல் நிகழ்த்துமே பல அதிசயம்
செயலே சிறந்த சொல்
வாழ்வில் வெல்ல
இதை நீ, உன் நினைவில் கொள் .