
கவிஞர் – அனல் ஏந்தி
வயது 75. துறவு பூண்ட தமிழ் அறிஞர்.
“முதல் மொழி” நான்காம் ஆண்டு மலர் சரி பார்த்தல் பணிக்காக வந்திருந்தார்.
எதிர்பார்ப்பில்லாத எளிமையான மனிதர். தமிழகத்திலிருந்து காஷ்மீர் வரை நடைப்பயணமாகச் சென்று திரும்பிய அனுபவம் கொண்டவர். பல கவிதை கட்டுரைகள் கதைகளை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய நான்கு அருமையான ஹைக்கூ கவிதைகளைப் படித்துக் காண்பித்தார்
அவர் மேற்கொண்ட நீண்ட நடை பயணத்தின் மூலம் அவர் உணர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
அவை
1. இந்தியா முழுவதும் மனித நேயம் நிரம்பி இருக்கிறது.
2. கடவுள் இருக்கிறார். அவர் சட்டைப் பையில் வெறும் பத்து ரூபாயுடன் காஷ்மீர் வரை நடைப்பயணம் சென்று பத்திரமாகத் தமிழகம் திரும்ப யார் காரணம் ? என்று கேட்டு. “அவனைத் தவிர வேறு யாரும் இல்லை” என்றார்
3. இந்தியாவின் அழகுக்கும், கலாச்சாரத்துக்கும் ஈடு இணை ஏதுமில்லை.