அம்மா பெற்றெடுத்து, இவ்வுலகைக் காண்பித்து , என்னைச் செதுக்கி
பாட்டிகள், பெரியம்மாக்கள், சித்திகள், அத்தைகள், மாமிகள் ஆகியோரின்
அன்பைப் பெற்று நான் வளர்ந்து
சகோதரிகளுடன் நானும் மலர்ந்து
அவர்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்று
தோழிகளுடன் மனம் திறந்து பேசி,
இவ்வுலகை அலசி, நல் அனுபவம் பெற்று
மனைவியின் கைபிடித்து, அவளின் முழு அன்புடனும், அரவணைப்புடனும் இவ்வுலகில் என்னை நான் நிறுத்திக்கொண்டு
மகள்கள் , மருமகள்கள் ஆகியோருடன் என் அன்பைப் பகிர்ந்து
பேத்திகளிடம் என்னை முழுமையாகக் கொடுத்து புது உலகைக் கண்டு
இக்கணம் திரும்பிப் பார்க்கிறேன்
இதை நான் மனதாக உணர்கிறேன்
நான் ஒன்றுமில்லை இவ்வுலகில் இப்பெண்களின்றி
மகளிர் தினத்தில் இன்று
அவர்கள் அனைவருக்கும்
என் வாழ்த்துக்களும்
நன்றிகளும்