விடுமுறை விட்டதும்
நிலவின் பொலிவுடன்
ஊருக்கு வருவாள்
அந்த நிலவுக்கு
ஓய்வு தருவாள்
அவள் வீட்டு வேலிக்குப்
பின் நின்று பார்ப்பாள்
ஏனென்று கேட்டால்
முதலில் கட்டு தாலி
என்பாள்
என் தாய்மொழி தான்
அவளுக்கும்
இருந்தும்
மௌன மொழியில் தான்
அவள் பதில் இருக்கும்
அவள் பெயர்
மகிழ் மொழி
விரைவில் அவள்
கை பிடிப்பேன்
மகிழ் மொழி
தமிழ் பேச
நான் கேட்பேன்