
நூல்* : ஆகோள்
*நூல் ஆசிரியர்* : கபிலன் வைரமுத்து
*பதிப்பகம்*:டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
இது குற்ற இனச் சட்டத்தையும் இன்றைய அதிநவீன தொழில்நுட்பமான பெருந்தரவு மற்றும் ஒரு மெய் நிகர் உலகத்தை உருவாக்கக்கூடிய மெட்டாவர்ஸ் (metaverse) ஆகியவற்றைத் தொடர்புப் படுத்தும் ஒரு அபூத புனைவு கதைக் களம்.
ஆகோள் – சங்க காலத்தில் சிற்றரசுகளின் இடையே நிகழ்ந்த போர்களில் எதிரியின் ஆடு மாடுகளைக் கவர்ந்து வரும் செயலாகும். இது இக்கதையில் எதிராளியின் பலம் இழக்கச் செய்யும் செயலாகக் கருதப்பட்டுள்ளது.
ஒரு கால இயந்திரத்தை(Time Machine) கொண்டு நிகழ்காலத்தில் உள்ள சிலர் கடந்த காலத்திற்குச் சென்று, 1920 ஆம் ஆண்டில், பெருங்காமநல்லூர் என்ற ஊரில் மக்கள் ஆங்கிலேயர் அரசை எதிர்த்துப் புரட்சி செய்து அதில் சிலர் மாண்ட காட்சியைக் காண நேர்கிறது.
அந்தப் புரட்சிக்கும் இன்றைய காலகட்டத்திற்கும், வரும் காலங்களுக்கும் என்ன தொடர்பு ? கடந்த கால நிகழ்வுகள் கொடுத்த படிப்பினை என்ன? போன்ற கேள்விகளுடன் கதை நகர்கிறது.
வரலாறு, அறிவியல், அரசியல், ஆன்மீகம், காதல், நவீனத் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கொண்ட கூட்டாஞ்சோறு இக்கதை.
சொல்லிய விதம் புதிது. சுவைத்துப் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.