
அண்ணா
மூன்றெழுத்து அதிசயம்
என்றும் அவன்
தமிழகத்தில் நிரந்தரம்
“தமிழ்நாடு” பெயர் தந்தவன்
தன் தமிழாலே வென்றவன்
பெரியாரின் மாணவன்
திராவிடத்தின் நாயகன்
தம்பிகளை நம்பி
உழைப்பாலே முன்னேறி
கழகம் அமைத்தவன்
தமிழகத்தின் அரியணை பிடித்தவன்
எண்ணற்ற புத்தகங்களைப் படித்தவன் படித்ததையெல்லாம் பலர் அறிய உரைத்தவன்
ஆரியத்தை வீழ்த்தியவன்
திராவிடத்தை உயர்த்தியவன்
எத்திசைச் செலினும்
“அண்ணா” என்றால்
இன்னும், அண்ணாந்து தான் பார்க்கிறார்கள்
சிலருக்கு “கண்ணா”என்றால்
எங்களுக்கு என்றும் “அண்ணா” தான்.