
படம் : க செந்தில் குமார்
வளர்ந்து விட்ட நம்பிக்கைகள்
அதன் கீழ் நிற்பவர்களுக்கு நிழல் தருகிறது
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குப்
பல கேள்விகள் எழுகின்றது
நிழல் நிஜமாகும்போது
நம்பிக்கைகள் மேலும் வளர
அது உரம் ஆகிறது
கேள்விகளுக்கு விடை இல்லாதபோது
தூரம் அதிகமாகிறது
இருந்தும் நம்பிக்கைகளுடனும் கேள்விகளுடனும்
நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது